ஆர்வர்டு மார்க் I
ஆர்வர்டு மார்க் I என்ற கணினி ஐபிஎம் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டு ஆர்வர்டு பல்கலைக்கழகத்திற்கு பெப்ரவரி 1944இல் அனுப்பப்பட்ட மின்-இயந்திரக் கணினி ஆகும். முதலில் ஐபிஎம் தானியக்க வரிசையால் கட்டுப்படுத்தப்படும் கணக்குப்பொறி (Automatic Sequence Controlled Calculator, ASCC), என்றழைக்கப்பட்ட இதனை மார்க் I என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் பெயரிட்டது.[1]

ஆர்வர்டு-ஐபிஎம் மார்க் 1 கணினியின் இடது பகுதி
வலது பகுதி

உள்ளீடு/வெளியீடு மற்றும் கட்டுப்பாட்டின் விவரங்கள்
மின்னனியல் இயந்திரப்பொறி கணினியான இதனை அவார்டு அயிக்கன் வடிவமைத்தார். இது ஐக்கிய அமெரிக்க கடற்படையின் கப்பல்கள் பிரிவினால் மே, 1944இல் பயன்படுத்தப்பட்டது. பின்னர் பல்கலைக்கழகத்திற்கு அலுவல்முறையாக ஆகத்து 7, 1944இல் வழங்கப்பட்டது.
குறிப்புகள்
- ஆனால் கணினி வன்பொருள் மீது பொறிக்கப்பட்டுள்ள பெயர் அயிக்கன்-ஐபிஎம் தானியக்க வரிசையால் கட்டுப்படுத்தப்படும் கணக்குப்பொறி மார்க் I என்பதாகும். அக்காலத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படமொன்றில் (Wilkes 1956:16 figure 1-7) ஐபிஎம் தானியக்க வரிசையால் கட்டுப்படுத்தப்படும் கணக்குப்பொறி எனக் காணப்படுகிறது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.