ஆர்த்திப் பிரபந்தம்

ஆர்த்திப் பிரபந்தம் 15-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். மணவாள மாமுனிகள் என்பவரால் இயற்றப்பட்டது.

நூல்

  • ஆர்த்தி என்பது உலகளந்த பெருமானின் திருவடிகளைக் குறிக்கும். [1]

இதில் 60 பாடல்கள் உள்ளன. இவை வெண்பா, விருத்தம், கலித்தாழிசை, கலிப்பா ஆகிய பாவினங்களால் ஆனவை.

எல்லாப் பாடல்களும் ‘எதிராசர்’ என்னும் பெயரைச் சொல்லி வேண்டுகின்றன. எதிராசர் என்பது வைணவ ஆசாரியன் இராமானுசர் பெயர்களில் ஒன்று. சில பாடல்களில் இவர் தன் ஆசிரியர் திருமலையாழ்வார் என்பவரையும் போற்றியுள்ளார்.

காட்டு - பாடல் 1

தேசம் திகழும் திருவாய் மொழிப்பிள்ளை
மாசில் திருமலையாழ் வார்என்னை – நேசத்தால்
எப்படியே எண்ணியுன்பால் சேர்த்தார் எதிராசா
அப்படியே நீசெய்(து) அருள். [2]

காட்டு - பாடல் 2

இன்னம் எத்தனை காலம் இந்த உடம்புடன் யான் இருப்பன்
இன்னபொழுது உடம்பு விடும் இன்னபடி அதுதான்
இன்னவிடத்தே அதுவும் என்னும் இவையெல்லாம்
எதிராசா! நீ அறிதி யான் இவை ஒன்றறியேன்
என்னை இனி இவ்வுடம்பை விடுவித்து உன் அருளால்
ஏராரும் வைகுந்தத்தேற்ற நினைவு உண்டேல்
பின்னை விரையாமல் மறந்து இருக்கிறதென்? பேசாய்
பேதைமை தீர்த்து என்னை அடிமை கொண்ட பெருமானே <ref>பாடல் 33</ref>

நூலின் பெருமை

  • எம்பெருமான் திருவடிகளே சரணம் [3]
  • ஜீயர் திருவடிகளே சரணம் [4]

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. அஞ்ஞானத்துக்கு அடி அபராதம் -
    அபூர்திக்கு அடி ஞான பூர்த்தி -
    ஆர்த்திக்கு அடி அலாபம் -
    அபிநிவேசதுக்கு அடி அழகு – ஸ்ரீ வசன பூஷணம் 294

  2. பாடல் 12
  3. இந்தத் தொடர் ஆர்த்திப் பிரபந்தம் 15-ஆம் பாடலின் முதல் அடியாக உள்ளது.
  4. ஜீயர் என்ன்னும் பெயர் இந்நூலாசிரியர் மணவாள மாமுனிகளைக் குறிக்கும். நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலிலுள்ள பதிகங்கள் ஒவ்வொன்றும் முடிந்த பின்னர் இத்தொடர் உள்ளது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.