ஆரி முலிச்

ஆரி முலிச் (Harry Kurt Victor Mulisch, ஹாரி குர்ட் விக்டர் முலிஷ், சூலை 29, 1927அக்டோபர் 30, 2010[1]) நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓர் புகழ்பெற்ற டச்சு எழுத்தாளர். 30க்கும் மேற்பட்ட புதினங்கள், நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் மெய்யியல் சிந்தனைகளை எழுதியுள்ளார்[1]. இவை இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[2].

ஆரி முலிச்

பிறப்பு {{{birthname}}}
சூலை 29, 1927(1927-07-29)
ஹார்லெம், நெதர்லாந்து
இறப்பு அக்டோபர் 30, 2010(2010-10-30) (அகவை 83)
ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து
தொழில் எழுத்தாளர்
நாடு டச்சுக்காரர்
இலக்கிய வகை புதினங்கள், நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
த அஸ்ஸால்ட், [த டிஸ்கவரி ஆஃப் ஹெவன்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
பட்டியல்
http://www.mulisch.nl

போருக்குப் பிந்தைய டச்சு இலக்கியத்தில் வில்லெம் பிரடெரிக் ஹெர்மன்ஸ், கெரார்ட் ரேவ் ஆகியாருடன் "தலைசிறந்த மூவர்" எனக் கருதப்படுகிறார். அவருடைய புதினம் த அஸ்ஸால்ட் ஓர் திரைப்படமாக எடுக்கப்பட்டு கோல்டன் குளோப், ஆசுகார் விருதுகளைப் பெற்றது.[3] 2007 வாக்கெடுப்பொன்றில் அவரது 1992 புதினம் த டிஸ்கவரி ஆஃப் ஹெவன், "என்றைக்குமான மிகச் சிறந்த டச்சு புத்தகம்". என தெரிவு செய்யப்பட்டது.[4] நோபல் பரிசு பெறக்கூடியவராக கருதப்பட்டார்.[4]

முலிச்சின் கண்கண்ணாடிகளும் புகைக்குழலும் மிகவும் அறியப்பட்டவை.[4]

மேற்கோள்கள்

  1. "Harry Mulisch, Dutch Novelist, Dies at 83", The New York Times, October 31, 2010.
  2. "Dutch Jewish author Harry Mulisch dies". AFP. 1 November 2010. Archived from the original on 20 December 2012. https://archive.is/7Wvn. பார்த்த நாள்: 1 November 2010.
  3. "Dutch author Harry Mulisch dies". CBC News. 31 October 2010. Archived from the original on 2 November 2010. http://web.archive.org/web/20101102132927/http://www.cbc.ca/arts/books/story/2010/10/31/mulisch-obit-fiction-author-holland.html. பார்த்த நாள்: 31 October 2010.
  4. "Leading Dutch writer Mulisch dies". Gulf Daily News. 1 November 2010. http://www.gulf-daily-news.com/NewsDetails.aspx?storyid=290610. பார்த்த நாள்: 1 November 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.