ஆரி பாட்டர் (திரைப்பட தொடர்)
ஆரி பாட்டர் திரைப்பட தொடர்கள் ஆரி பாட்டர் நாவல்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்பட தொடர்கள் ஆகும். வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் வினியோகஸ்தராக செயல்பட்டது. இந்த திரைப்படம் மொத்தம் 8 கற்பனை பட (fantasy films) வரிசைகளாக வெளிவந்துள்ளன. இதில் ஆரி பாட்டர் அண்ட் ஃபிலாசஃபர் ஸ்டோன் (2001) முதல் படமாக வெளிவந்தது, மேலும் ஆரி பாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் - பகுதி 2 (2011) இறுதிப் படமாக வெளியானது.
ஆரி பாட்டர் திரைப்படங்கள் | |
---|---|
![]() ஆரி பாட்டர் திரைப்படங்கள் தொகுப்பு | |
தயாரிப்பு | டேவிட் ஹேமேன் |
மூலக்கதை | ஜே. கே. ரௌலிங்கின் ஆரி பாட்டர் நாவல்கள் |
நடிப்பு | டேனியல் ராட்க்ளிஃப் ருபர்ட் க்ரிண்ட் எம்மா வாட்சன் |
விநியோகம் | வார்னர் பிரதர்ஸ் |
வெளியீடு | 2001–11 (10 ஆண்டுகள்) |
நாடு | இங்கிலாந்து ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | மொத்தம் (8 படங்கள்): $1,155,000,000 |
மொத்த வருவாய் | மொத்தம் (8 படங்கள்): $7,556,140,465 |
இந்தத் திரைப்பட தொடர்களில் டேனியல் ராட்க்ளிஃப், ருபர்ட் க்ரிண்ட் மற்றும் எம்மா வாட்சன் போன்றோர் முறையே ஆரி பாட்டர், ரான் வீஸ்லி, ஹெர்மியான் கிரான்கர் என்ற மூன்று முக்கிய கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Growing Up with Harry Potter – photo essay by Time
- Harry Potter
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.