ஆரவல்லி மாவட்டம்

ஆரவல்லி மாவட்டம் (Aravalli district), (குஜராத்தி: અરવલ્લી જીલ્લો) இந்தியாவின் குஜராத் 33 மாவட்டங்களில் ஒன்று. இது குஜராத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டம், சபர்கந்தா மாவட்டத்தின் ஆறு வருவாய் வட்டங்களைக் கொண்டு, 15 ஆகஸ்டு 2013ஆம் நாளில் புதிதாக துவக்கப்பட்டது. இம்மாவட்ட தலைமையிடம் மோதசா நகரம். [1] இம்மாவட்டத்தில் கிஉஷ்ணருக்கு அமைந்த ஷாம்ளாஜி கோயில் உள்ளது.

ஆரவல்லி மாவட்டம்
અરવલ્લી જીલ્લો
மாவட்டம்
தலைமையிடம்மோதசா
Named forஆரவல்லி மலைத்தொடர்
மக்கள்தொகை (2013)
  மொத்தம்1.024
15-8-2013இல் புதிதாக துவக்கப்பட்ட 7 மாவட்டங்களுடன் குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்

வருவாய் வட்டங்கள்

  1. மோதசா வட்டம்
  2. மால்பூர் வட்டம்
  3. தான்சூரா வட்டம்
  4. மெக்ராஜ் வட்டம்
  5. பிலோதா வட்டம்
  6. பயத் வட்டம்

ஆரவல்லி மலைத் தொடர்

ஆரவல்லி மலைத்தொடரின் 5653 அடி (1723 மீட்டர்) உயரமான இச் சிகரம் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

பொருளாதாரம்

5 மெகா வாட் திறன் கொண்ட தனியார் சூரிய ஒளி மின்சக்தி ஆலை கொண்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.