ஆரட்டதேசம்

ஆரட்டதேசம் இமயமலையில் கங்கை உற்பத்தியாகும் இடத்தில் தெற்கிலும், நேபாளதேசத்திற்கு கிழக்கில், கிழக்கு மேற்காக நீண்டு பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்

இந்த தேசத்தில் பூமி முழுவதும் எப்பொழுதும் இடைவிடாத பனி, மழை, குளிர் இவைகள் அதிகமாக இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்

இந்த தேசத்திற்கு நடுவில் பெரியமலையும், குன்றுகளும், அடர்ந்த காடுகளாலும், பெரியமலைகளினாலும், சூழப்பட்டுள்ளதால், இதை மலை நாடு என்றே அழைப்பதுண்டு. இத்தேசத்தின் காடுகளில் வெள்ளைக்குதிரைகளும், வெண்மை ஆடுகளும் கொடிய காட்டு விலங்குகளும் அதிகம் உண்டு.

நதிகள்

இந்த ஆரட்டதேசத்தில் இமயமலையிலிருந்து உருவாகி தெற்கு நோக்கி ஓடுகிற நதி கண்டகீ இந்த தேசத்தை செழிக்க வைக்கின்றது. [3]

கருவி நூல்

சான்றடைவு

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 201 -
  3. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 202 -
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.