ஆரஞ்சு ஆறு

ஆரஞ்சு ஆறு (Orange River) என்பது தென்னாப்பிரிக்காவின் மிக நீளமான ஆறாகும். ஆரஞ்சு ஆற்றின் வடிகால் பரந்து விரிந்து வடக்கில் உள்ள நமீபியா மற்றும் போட்சுவானா வரை நீண்டுள்ளது. இவை லெசோத்தோவில் உள்ள ட்ரகான்ஸ்பெர்க் மலைகளில் உருவாகி தென் ஆப்பிரிக்காவில் மேற்கு புறமாக ஓடி அத்திலாந்திக்குப் பெருங்கடலில் கலக்கிறது. இந்த ஆறு தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா மேலும் தென்  ஆப்பிரிக்கா மற்றும் லெஸொதோ இடையே ஒரு சர்வதேச எல்லையை உருவாக்குகிறது. இந்த ஆரஞ்சு ஆறு தென் ஆப்பிரிக்காவிற்குள்ளும் மாகாண எல்லைகளை உருவாக்குகிறது. உபிங்டன் மாகாணத்தைத் தவிர வேறு எந்த பெரிய நகரதிற்குள்ளும் இந்த ஆறு பாய்வதில்லை. ஆரஞ்சு ஆறு தென் ஆப்பிரிக்காவிற்கு விவசாயம் மற்றும் நீர் மின்சாரம் தயாரிக்க கொடுக்கும் நீர் ஆதாரமாக இருப்பதால் இது தென் ஆப்பிரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆற்றிற்கு ஆரஞ்சு ஆறு என்று பெயரிட்டவர் இராபர்ட் ஜேக்கப் கோர்டான் ஆகும். இது டச்சு நாட்டிலுள்ள டச்சு அரச விடுதியின் ஞாபகமாக பெயரிடப் பட்டது, கோஹி மக்கள் இதை காரியப் என்று அழைப்பர். க்ரூட் ஆறு அல்லது செங்கு ஆறு என்று லெஸோதோவில் அழைக்கப் படுகிறது. ஆனால் அதிகார பூர்வமான பெயர் ஆரஞ்சு ஆறுதான்.

ஆரஞ்சு ஆறு
கரீப், ஆரஞ்சு, செங்கு
ஆறு
ஆரஞ்சு ஆறு சூரிய அஸ்தமனம்
நாடுகள் Lesotho, தென்னாப்பிரிக்கா, நமீபியா
கிளையாறுகள்
 - வலம் கலோதன் ஆறு, வால் ஆறு, மீன் ஆறு (நமீபியா)
அடையாளச்
சின்னம்
கரீப் தம்
உற்பத்தியாகும் இடம்
 - உயர்வு 3,350 மீ (10,991 அடி)
கழிமுகம்
 - அமைவிடம் அத்லாண்டிக் பெருங்கடல்
நீளம் 2,200 கிமீ (1,367 மைல்)
வடிநிலம் 9,73,000 கிமீ² (3,75,677 ச.மைல்)
Discharge
 - சராசரி
ஆரஞ்சு ஆரின் தெற்கில்
Designations
Invalid designation
அலுவல் பெயர்ஆரஞ்சு ஆற்றின் முகத்துவாரம் (நம்பியா)
தெரியப்பட்டது23 ஆகஸ்டு 1995
உசாவு எண்744[1]
Invalid designation
அலுவல் பெயர்Orange River Mouth (South Africa)
தெரியப்பட்டது28 June 1991
உசாவு எண்526[2]

ஆற்றின் நீரோட்டம்

ஆரஞ்சு ஆறு இந்திய பெருங்கடலுக்குத் தெற்காக 193கி.மீ (120 மைல்) தொலைவில் 3000 மீ உயரத்தில், ட்ராகன்ஸ்பெர்க் என்ற மலையில் எழும்பி உருவாகி தென் ஆப்பிரிக்கா மற்றும் லெஸோதோ எல்லைகளை ஒட்டி ஒடுகிறது. லெஸோதோ விற்குள் செல்லும் போது இது செங்கு என்ற பெயரால் அழைக்கப் படுகிறது. இந்த ஆற்றின் ஒரு பகுதி மிக உயரமாக இருப்பதால் குளிர் காலங்களில் உறைந்து விடும் விளைவு ஆற்றின் கரையோர கீழ் பகுதிகளில் நீரற்ற வறட்சியை உருவாக்குகிறது இதனால் ஆடுகளும் கால்நடைகளும் அதிகம் பாதிக்கப் படுகிறது.

பின் இந்த ஆறு தென் ஆப்பிரிக்காவில் மேற்கு நோக்கி ஓடி தென் மேற்கு எல்லைகளை உருவாக்குகிறது. இந்த பகுதியில் முதலில் இந்த ஆறு கரியெப் அணைக்கட்டுக்குள் செல்லும். (இந்த அணைதான் தென் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய அணையாகும்.) அதன் பிறகு வாண்டர்க்லூஃப் அணைக்குச் செல்லும். லெஸோதோ எல்லையிலிருந்து இந்த அணையின் கீழே வரை ஆற்றின் கரை ஆழமாக அமைக்கப் பட்டுள்ளது. இதற்கு கீழே நிலமானது தட்டையாக உள்ளது. இங்கு ஆற்றின் நீரானது பாசனத்திற்கு அதிக அளவு உபயோகப் படுத்தப் படுகிறது.

சுதந்திர மாகாணத்தின் மேற்கிலும் கிம்பெர்லிக்கு தென்மேற்கிலும் ஆரஞ்சு ஆறு தனது முதல் உப ஆறு அல்லது கிளை ஆறான வால் ஆறைச் சந்திக்கிறது, இந்த ஆறே கிட்டத்தட்ட  மாகாணத்தின் வட எல்லையை உருவாக்குகிறது. இங்கிருந்து மேற்கு நோக்கி தென் கலாஹரி பகுதியில் உள்ள வனப் பகுதிகளுக்குச் சென்று நமிபியா ஆறை 200 தீர்க்க ரேகையில் சந்திக்கிறது. இக்கிருந்து மறுபடியும் 550 கி.மீ மேற்கு புறமாக ஓடி இந்த மாகாணத்திற்கும் நாம்பியாவின் ஐகாரஸ் பகுதிக்கும் சர்வதேச எல்லையை உருவாக்குகிறது. எல்லையில் இந்த ஆறு வியூல்ஸ்ட்ரிஃப் என்ற நகரை கடந்து செல்கிறது.

கடைசி கட்டமாக தனது ஓட்டத்தில் 800கி.மீல் (500மைல்கள்) ஆரஞ்சு ஆறு பல இடையிட்ட நீரோட்டங்கள் மற்றும் பெரிய காட்டாறுகளைச் சந்திக்கிறது. இந்த இடத்தில் மறுபடியும் ஆரஞ்சு ஆறு ஆழமாக உருவாக்கப் பட்டுள்ளது. இந்த ஆற்றுப் பகுதியில் தான் ஆக்ரபிஸ் நீர்வீழ்ச்சி காணப்படுகிறது, இங்கு ஆறு 122 மீட்டர் நீர் வீழ்ச்சியாக இறங்கி 26 கி.மீ தூரத்திற்கு செல்லுகிறது. இது நாம்பியாவில் உள்ள ஆரஞ்சுமண்ட் (”ஆரஞ்சு வாய்” என்று அர்த்தம்) என்ற சிறிய நகரத்திற்கும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள அலெக்ஸாண்டர் வளைகுடாவிற்கும் இடையில் அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது. இது முழுவதுமாக நீரோடைகள் மற்றும் மணற் திட்டுகளால் உருவாக்கப் பட்டுள்ளது எனவே போக்குவரத்திற்கு சாதகமானது அல்ல.

மழை அளவு மற்றும்  நீர்பிடிப்பு பகுதி

வறண்ட குளிர் காலங்களில் இந்த ஆறு தண்ணீர் வற்றி காணப்படும். காரணம் அதி வேக ஓட்டம் மற்றும் அதிவேகமாக நீர் நீராவியாக மாறுவதுதான். இந்த ஆறு ஆரம்பிக்கும் இடத்தில் மழைவீழ்ச்சி ஒரு வருடத்திற்கு 2.000 மி.மீ ஆகும் ஆனால் மேற்கு நோக்கி ஆறு செல்ல செல்ல இந்த மழை அளவு குறைந்து வருடத்திற்கு 50மி.மீ க்கு குறைந்து விடுகிறது. மழை காலங்களில்(கோடை காலமும் கூட) இந்த ஆரஞ்சு ஆறானது மூர்க்கமான காபி வண்ண பெரும் நீரோட்டமாக மாறும். அப்போது அது கொண்டு வருகிற வண்டல் படிவுகள் அங்கு நடைபெறக் கூடிய எல்லா பொறியியல் வேலைக்கும் ஒரு நீண்ட கால அச்சிறுத்தலாக இருந்து வருகிறது.

வரலாறு

ஆங்கிலேய காலனி ஆட்சிக்கு முன்பாக இங்கு வாழ்ந்தவர்கள் இதை காரியப் என்று அழைத்தார்கள். முந்தைய டச்சு பெயர் க்ரூடே ஆறு அர்த்தம் பெரிய ஆறு(Great River) ஆகும். இது பின்னாளில் டச்சு கிழக்கு இந்திய கம்பெனியின் படைத் தளபதி கர்னல் இராபர்ட் கார்டன் என்பவரால் ஆரஞ்சு ஆறு எனப் பெயரிடப் பட்டது. 1779 இல் இவர் இந்த ஆறு பாயும் உள்நாட்டு பகுதிக்குள் செல்லும் போது வில்லியம் வி ஆரஞ்சு என்பவரின் நினைவாக இதை ஆரஞ்சு ஆறு என அழைத்தார். ஆனால் அநேகர் தவறாக இந்த ஆறு அதனுடைய வண்ணத்தினால் இவ்வாறு அழைக்கப் படுவதாக தவறாகக் கருதுகின்றனர்.

பொருளாதாரம்

இது தென் ஆப்பிரிக்காவின் முக்கிய நீர் சேமிக்கும் பகுதியாக இருப்பதால் இது தென் ஆப்பிரிக்க பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நாட்டின் வேளாண்மை, தொழிற்சாலை மற்றும் சுரங்க தொழிலுக்கு உதவி செய்கிறது. இதில் உதவி செய்ய இரு பெரிய நீர் மேலாண்மை திட்டங்கள் உருவாக்கப் பட்டது. ஆரஞ்சு ஆறு திட்டம் மற்றும் லெஸோதோ உயர்நில நீர் திட்டம் ஆகும். வரலாற்று பூர்வமாக இந்த ஆறு தென் ஆப்பிரிக்காவின் வைர தேடலில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஏனெனில் முதல் வைரம் இவ்வாற்றின் வண்டல் மண்ணில்தான் கண்டுபிடிக்கப் பட்டது. இன்று இந்த ஆறைச் சுற்றிலும் நெடுக அநேக வைரச் சுரங்கங்கள் உள்ளன. காட்டு விலங்குகள் இல்லாததாலும் கோடையில் அதிக அளவு நீர் இருப்பதாலும் இந்த ஆறு பொழுது போக்கு அம்சமாக அநேக நிறுவனங்களால் உபயோகப் படுத்தப் படுகிறது.

சான்றுகள்

  1. "Orange River Mouth". பார்த்த நாள் 25 April 2018.
  2. "Orange River Mouth". பார்த்த நாள் 25 April 2018.

வெளி இணப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.