ஆமான்
கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி புன்தலைச் சிறா அர் கன்றெனப் பூட்டும் [புறம்(319)]
வளைந்த கொம்பினை உடைய ஆமான்களின் இளங்கன்றைச் சிறுவர்கள் தம்முடைய சிறுதேர்க்குச் சேங்கன்றாகப் பூட்டி ஓட்டினர் என்று கூறுவதன் மூலம் ஆமான்களின் கொம்பு வளைந்து இருந்தது என்பதும் அது சேங்கன்று போல இருந்ததாகவும் அறிய முடிகிறது.
ஆமான்
ஆமான் பார்ப்பதற்குப் பசுவைப்போலவும் அதேசமயம் மான் போன்ற தோற்றமும் அதைவிடச் சற்று உயரமாகவும் உள்ள விலங்காகும்.
'புறநானூற்றில் ஆமான்'
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச் சினங்கழி மூதாக் கன்றுமடுந் தூட்டும்
[ புறம்323]
புலியால் இறந்துபட்ட மானினுடைய கன்றுக்குக் கறவைப்பசு தன்கன்றாகக் கருதி பாலை ஊட்டும் என்பதால் இது பசுபோன்ற தோற்றம் உடையது என்பது உறுதியாகிறது .
இதனால் பசு அல்லாத வேற்றினம் என்னும் பொருளில் ஆமான் என மக்கள் பெயரிட்டு அழைத்துள்ளனர்.
பதிற்றுப்பத்தில் ஆமான்
கருங்கோட்டு ஆமான்[ பதிற்றுப்பத்து (30;10]
ஆ+மான்- ஆமான் . பசுபோன்ற மான் என்பது பொருள்.ஆமானின் நிறத்தைக் குறிக்கக் கருங்கோட்டு ஆமான் என கூறப்படுகிறது .
[குறிஞ்சிப்பாட்டில் ]ஆமான்
புழற்கோட்டு ஆமான்கு. பா(253) என்று கூறுவதன் மூலம் இதன் கொம்பு உள்துளை உடையது என்பது தெரிகிறது.
ஆமானின் கண்கள் பார்ப்பதற்கு மான் போன்று மிக அழகிய கண்களையுடையது என்பதை அமர்கண் ஆமா என்றும் மடக்கண் ஆமாஎன்று கூறுவதன் மூலம் அறிகின்றோம்.
சிறுபாணாற்றுப்படையில் ஆமான்
முல்லை நிலத்தூராகிய வேலூரில்(உப்பு வேலூர்)பாணர்கள் சென்று தங்கிய போது அவர்களுக்கு எயினர்குலப் பெண்கள் புளியங்கறியிட்ட சோற்றுடன் ஆமாவின் இறைச்சியையும் தந்து அவர்களுடைய பசியைத் தீர்த்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலம்பில் ஆமான்
[சிலம்பில்] கொற்றவையைப் பற்றிக் குறிப்பிடும் வேட்டுவ வரிகளில்
கரிய திரிக்கோட்டுக் கலைமிசைமேல்நின்றாயால்' என துர்க்கையின் வாகனம் மான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
'அகநானூறில் ஆமான்
'இருண்முகைச் சிலம்பின் இரைவேட்டு எழுந்த' 'பனைமருள் எருத்திற் பல்வரி இரும்போத்து' 'மடக்கண் ஆமான் மாதிரத்து அலறத்' 'தடக்கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு'[அகம்( 238) குறிஞ்சி த்திணை.]
பொருள் ; நெருங்கிய காட்டில் பெண்புலி பசியுற்றதாகப் பனந்துண்டினைப் போன்ற பிடரிமயிரினையுடைய பலவரிகளையுடைய ஆமாவின் ஏற்றினைக் கொன்று தின்றது என பொருள்படும் .
ஆமான் பாவை
[துர்க்கை]ச் சிலைகளில் துர்க்கையின் வாகனமாக ஆமான் உள்ளதால் துர்க்கை "ஆமான் பாவை" என அழைக்கப்பட்டது .
குறிப்பு
திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் உள்ள கட்டளைக் கிராமம் , மானூர், நத்தமேடு இவ்வூரில் உள்ள துர்க்கை சிலைகளில் வாகனமாக ஆமான் உள்ளது.