ஒசூர் ஆந்திர சாம்ஸ்கிருத்திகா சமிதி

ஆந்திர சாம்ஸ்கிருத்திகா சமிதி (சுருக்கமாக ஆந்திர சமிதி ) என்பது கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூர் நகரில் உள்ள ஒரு தெலுங்கு அமைப்பு ஆகும்.[1][2]


ஒசூர் ஆந்திர சாம்ஸ்கிருத்திகா சமிதி கட்டடம்
ஆந்திர சாம்ஸ்கிருத்திகா சமிதி பெயர்ப்பலகை

வரலாறு

இவ்மைப்பை நிறுவியவர் உலகத் தெலுங்கு மாநாட்டை முதன்முதலில் நடத்தியவரும், 1967 முதல் 1977 வரை இரண்டு முறை உத்தனப்பள்ளி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவரும், ஒசூரின் மேம்பாட்டுக்காக செயற்பட்டவருமான கே. எஸ். கோதண்டராமய்யா ஆவார்[3]. இவருக்கு ஆந்திர சாம்ஸ்கிருத்திகா சமிதி வளாகத்தின் முகப்பில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

செயல்பாடுகள்

இவ்வமைப்பினர் தெலுங்கு இலக்கிய நூல்களைக் கொண்ட ஒரு நூலகத்தை நடத்திவருகின்றனர். இங்கு மாணவர்களுக்கு இசை வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இவர்களுக்கு என சொந்தமாக உள்ளரங்கம், அலுவலகம் ஆகியன உள்ளன. உள்ளரங்கில் உரிய நாட்களில் தெலுங்கு இலக்கிய நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள்,[4] பாரம்பரிய தெலுங்கு இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். ஆண்டுதோரும் கிருஷ்ணதேவராயனின் முடிசூட்டு விழாவை ஒட்டி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.[5] தெலுங்கு இலக்கியவாதிகளுக்கும் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கின்றனர்.[6][7] இவ்வுள்ளரங்கை மற்ற நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டு அமைப்புக்கு நிதி சேகரிக்கின்றனர்.[8][9]

அமைவிடம்

இம்மன்ற அலுவலகம் மற்றும் உள்ளரங்கம் ஆகியன ஒசூர், காமராசர் காலனியில் இயங்கிவருகின்றன.

மேற்கோள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.