ஆதவன் (இதழ்)

ஆதவன் இலங்கை, கொழும்பு பிலியந்தலையிலிருந்து வெளிவந்த ஒரு வார இதழாகும். இதன் முதல் இதழ் சூன் 19, 2000 இல் வெளிவந்தது.

வெளியீடு

  • ராவய பப்ளிகேசன்ஸ் 83, பிலியந்தலை வீதி, மஹரகம.

இலங்கையில் விக்டர் ஐவன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஒரு சிங்கள வார இதழ் ராவய ஆகும். இவ்வார இதழ் இலங்கை அரசியலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்திய ஒரு இதழாக விளங்கியது. படித்த வாசகர் மத்தியில் நம்பகத்தன்மைமிக்க நடுநிலைய இதழாகவும் கருதப்பட்டு வருகின்றது.

நோக்கம்

ஆதவன் பத்திரிகை யுனெஸ்கோ அமைப்பின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டது. சிங்களத்தில் வெளிவரும் ராவய பத்திரிகை துல்லியமான கருத்துக்களை முன்வைக்கும் பயனுள்ள விவாதத் தளங்களை உருவாக்கி வெளிவருவதுடன், தமிழ்மொழியிலும் இவ்வாறானதொரு பத்திரிகையை வெளிக்கொணர்வது இதன் நோக்கமாக உள்ளது என ராவய முதலாம் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளடக்கம்: இலங்கை தேசிய அரசியல் தமிழ் தேசிய அரசியல் மலையக அரசியல் என்றடிப்படையில் இலங்கை அரசியலைப் பிரதானப்படுத்தியிருந்தது. சிங்கள வாரப் பத்திரிகையான ராவயில் வெளிவந்த பல நிகழ்கால கட்டுரைகள் இதில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. மேலும், தமிழர் பிரச்சினைகளை மையப்படுத்திய பல அரசியல் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன. அதேபோல முற்போக்குக் கவிதைகள், குட்டிக் கதைகள், சர்வதேச அரங்கில் நடைபெற்ற திரைப்படவிழாக்களில் விருதுகள் பெற்றுள்ள திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களும் இடம்பெற்றிருந்தன. இவ்விதழ் 20 பக்கங்களைக் கொண்டிருந்தது. இருப்பினும் சுமார் ஓராண்டுகாலம் வெளிவந்த இவ்விதழ் இடையில் நிறுத்தப்பட்டது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.