ஆட்டம்

ஓர் ஒழுங்குடன் ஆடப்படும் செயற்பாடு ஆட்டம் (game) அல்ல விளையாட்டு எனலாம். பொதுவாக மனமகிழ்விற்காக இது ஆடப்பட்டாலும் கல்வி நோக்கம் கொண்டும் ஆட்டங்கள் வடிவமைக்கப்படுவதுண்டு. இவ்வகை ஆட்டங்கள் விளையாட்டுப் போட்டிகளினின்றும் வேறுபட்டவை; போட்டிகள் தீவிரமாக நடத்தப்படாமையும் உடற்றிறன் கூடுதலாக வேண்டாமையும் சில காரணிகள். அதேபோல எண்ணங்களின் வெளிப்பாடாக இல்லாமையால் கலையும் அல்ல. இருப்பினும் இந்த வேறுபாடுகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. சிலர் ஊதியம் பெற்று விளையாடுவதால் இதனை வேலையாகக் கருதுவோரும் உண்டு.சில ஆட்டங்கள் (காட்டாக,புதிர்கள், கணினி ஆட்டங்கள்) கலைத்திறனோடு வடிவமைக்கப்பட வேண்டி யிருப்பதால் கலை என்ற பகுப்பிலும் கொள்ளலாம்.

கயிறு இழுத்தல் எளிய, ஆட்டக்கருவிகள் தேவையில்லாத, விரைவில் ஒருங்கிணைக்கக்கூடிய ஓர் ஆட்டமாகும்.
பால் செசான்னால் 1895ஆம் ஆண்டு சீட்டாட்டத்தைக் குறித்து வரையப்பட்ட சீட்டு ஆட்டக்காரர்கள் என்ற ஓவியம்

ஓர் ஆட்டத்தின் முக்கிய கூறுகள்: இலக்குகள், விதிமுறைகள், சவால்கள் மற்றும் எதிரெதிர்ச் செயல்கள் ஆகும்.பொதுவாக மனத்திறன் அல்லது உடற்றிறனை தூண்டுவதாக அமையும். நடைமுறைத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், ஓர் உடற் பயிற்சியாகவும்,கல்வி கற்றலின் கூறாகவும் உளவியலைத் தூண்டுவதாகவும் அமைகிறது.கூட்டாளிகளின் பங்களிப்பு இல்லாமையால் சாலிடேர், சிக்சா புதிர் போன்ற "ஆட்டங்கள்" ஆட்டவகையில் அல்லாது புதிர்கள் வகைப்பாற் படும் என கிரிசு கிராஃபோர்ட் போன்ற ஆட்ட வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.[1] கி.மு 2600ஆம் ஆண்டிலிருந்தே,[2][3] மனித நாகரிகத்தின் உலகளாவிய கூறாக ஆட்டங்கள் இருந்து வந்திருக்கின்றன. அனைத்து பண்பாடுகளிலும் முதன்மை இடம் பெற்றிருந்தன.[4] தமிழ் சங்கப் பாடல்களிலும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திலும் பல ஆட்டங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. Chris Crawford (game designer) (2003). Chris Crawford on Game Design. New Riders. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-88134-117-7.
  2. Soubeyrand, Catherine (2000). "The Royal Game of Ur". The Game Cabinet. பார்த்த நாள் 2008-10-05.
  3. Green, William (2008-06-19). "Big Game Hunter". 2008 Summer Journey (டைம்). http://www.time.com/time/specials/2007/article/0,28804,1815747_1815707_1815665,00.html. பார்த்த நாள்: 2008-10-05.
  4. "History of Games". MacGregor Historic Games (2006). பார்த்த நாள் 2008-10-05.

மேலும் படிக்க

  • Avedon, Elliot; Sutton-Smith, Brian, The Study of Games. (Philadelphia: Wiley, 1971), reprinted Krieger, 1979. ISBN 0-89874-045-2
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.