ஆகஸ்ட் கோம்ட்
ஆகஸ்ட் கோம்ட் (Auguste Comte, 19 சனவரி 1798 – 5 செப்டம்பர் 1859) ஒரு பிரெஞ்சு மெய்யியாலாளர். சமூகவியலின் தந்தை என அழைக்கப்படுபவர். நேர்க்காட்சி வாதம் (Positivism) எனும் கோட்பாடினை முதன் முதலாக உருவாக்கியவர். ஹென்றி செயின்ட் சைமன் எனும் சோசியலிசவாதியின் கருத்துக்களின் தாக்கம் ஆகஸ்ட் கோம்ட் மீது இருந்தது.[2] இதனால் நேர்க்காட்சி வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டு பிரெஞ்சு புரட்சியின் விளைவால் உருவான சமூக மாற்றங்களைச் சரி செய்யத் தேவைப்படும் சமூக அறிவியலை உருவாக்க முயன்றார். எனவே அறிவியலை அடிப்படையாகக் கொண்ட சமூகக் கோட்பாடுகள் உருவாக வேண்டும் என்று விரும்பினார். இவரது சிந்தனை நோக்கு 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ் , ஜான் ஸ்டுவர்ட் மில், ஜார்ஜ் மில்லட் போன்ற சமூக சிந்தனையாளர்களின் மேல் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.
ஆகஸ்ட் கோம்ட் | |
---|---|
![]() ஆகஸ்ட் கோம்ட் | |
முழுப் பெயர் | ஆகஸ்ட் கோம்ட் |
பிறப்பு | சனவரி 19, 1798 பிரான்சு |
இறப்பு | 5 செப்டம்பர் 1857 59) பாரிஸ், பிரான்சு | (அகவை
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | நேர்க்காட்சி வாதம் (Positivism), மூன்று நிலைகளின் விதி (law of three stages[1] , பொதுநலப்பண்பு (altruism) |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.