அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் (السلام عليكم) - உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்பது இதன் பொருளாகும். இது அரபி வாக்கியமாகும். இது முகமன் கூறுவதற்கு பயன்படுகிறது.

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும்பொழுதும் இவற்றை கூறிக்கொள்வர். இதை சலாம் சொல்லுதல் என்றும் சொல்வார்கள். தமிழில் "வணக்கம்" சொல்லும் முறைக்கும் இவற்றிற்கும் வேறுபாடு உண்டு.

அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்கான பதிலாக "வ அலைக்கும் (முஸ்)ஸலாம்" என்று கூறுவார்கள். இதற்கு பொருள் "உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!" என்பதாகும்.[1]

சந்திக்கும் பொழுது மட்டுமின்றி பிரியும் பொழுதும் சலாம் சொல்லவேண்டும் என்கிறது இஸ்லாம்.

இந்த முகமன் கூறுதலை எல்லா நேரங்களிலும் பயன்படுத்துவார்கள். அதாவது சாதாரணமாக சந்திக்கும் பொழுது, திருமணங்களுக்கு செல்லும்பொழுது, வீட்டினுள் நுழையும்பொழுது, இறந்தவர் வீட்டுக்கு செல்லும் பொழுது இப்படி எல்லா நேரங்களிலும் சலாம் சொல்லவேண்டும்.[2]

இருவர் சண்டையிட்டு அவர்களை சமாதானப்படுத்திவைக்க "அவருக்கு சலாம் சொல்லுங்கள்" என்று சொல்லி சலாம் சொல்லவைத்துச் சேர்த்து வைப்பார்கள்.

கடமையும் விதிகளும்

  1. ஒருவர் இன்னொருவரைப் பார்க்கும் பொழுது "கண்டிப்பாக" சலாம் சொல்லவேண்டும்
  2. சலாம் சொல்லும் பொழுது சப்தமாக சொல்லவேண்டும்
  3. அதற்கு பதில் அதைவிட சப்தமாக சொல்லுதல் வேண்டும்.

(பதில் சொல்லும் பொழுது ஒருவர் சப்தத்தை குறைத்து சொல்கிறார் என்றால் அவர் முதலாமவர் மீது கோபமோ அல்லது வெறுப்புடன் இருக்கிறார் என்று நினைத்துக் கொள்வர்)

  1. கூட்டத்தினரைப் பார்த்து தனியாய் வருபவர் சலாம் சொல்லுதல் தவிர்க்கவேண்டும், அதற்கு பதிலாக கூட்டதின் தலைவர் அல்லது கூட்டத்திலிலுள்ளவர் தான் முதலில் சலாம் சொல்லவேண்டும்.

அருகில் இல்லாதவருக்குச் சலாம் சொல்லுதல்

நண்பர்கள் உறவினர்கள் தூரத்தில் வசிப்பார்களேயானால் அவர்களை மற்றவர்கள் சந்திக்க செல்வதை அறிந்தால் செல்பவரிடம் "அவருக்கு சலாம் சொன்னதாக சொல்லுங்கள்" என்று சொல்லி அனுப்புவார்கள்

முதல் சலாம்

அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்" என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.

எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழம்லும்) குறைந்து கொண்டே வருகின்றன" என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.[3]

மேற்கோள்கள்

  1. ""As-Salaamu-Alaikum" and "Wa-Alaikum-as-Salaam"". Ccnmtl.columbia.edu. பார்த்த நாள் 2013-07-27.
  2. Sheikh Muhammad Salih Al-Munajjid. "Is it mustahabb for one who gets up to leave a gathering to say salaam to those who are still sitting?". Islamqa.info.
  3. ஸஹீஹ் புகாரி, 4:60
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.