மதுராப்புர அஸ்ஸபா வித்தியாலயம்
மாறை/அஸ்ஸபா வித்தியாலய இலச்சினை ]] அஸ்ஸபா வித்தியாலயம் (Assafa Vidyalaya, අස්සපා මුස්ලිම් විද්යාලය) இலங்கையில் மாத்தறை மாவட்டத்தில் வெலிகமை மதுராப்புர (Madurapura, මදුරාපුර) என்ற இடத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பாடசாலையாகும்.[1]
வரலாறு
ஆசிரியர் த.சா. அப்துல் லத்தீப், அதிபர் எம்.பீ.எம். ஸஹீத், ஆயுர்வேத மருத்துவர் பீ.எம். அப்துல் கரீம், எம்.ஐ.எம். ஹபீள், எம்.சீ. அபூதாஹிர் ஆகியோரின் அயராத உழைப்பினாலேயே இப்பாடசாலை இவ்வூரில் அமைந்தது. இதற்காக மருத்துவர் அப்துல் கரீம் தனது சொந்தக் காணியை அன்பளிப்புச் செய்தார்.
1973 சனவரி 13 ஆம் நாள் சனிக்கிழமை கல்வியமைச்சின் பிரதிநிதியாக, பிரதிக் கல்வியமைச்சராகவிருந்த பீ.வை. துடாவை, கல்வியமைச்சின் தமிழ்மொழிப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ.எச்.எம்.எம். வெபா ஆகியோர் உத்தியோகபூர்வமாக இப்பாடசாலையைத் திறந்து வைத்தனர். அஸ்ஸபா வித்தியாலயத்தின் முதலாவது தலைமையாசிரியாராக எஸ்.ஏ.எம். மெளலானா பதவியேற்றார்.
1990 ஆம் ஆண்டு இப்பாடசாலையிலிருந்து முதன் முதலாக மாணவர்கள் க.பொ.த. சா.த. பரீட்சைக்குத் தோற்றினர். 1998 ஆம் ஆண்டு இப்பாடசாலையிலிருந்து வெள்ளிவிழாவின் போது 'மதுரம்' சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
சேவைபுரிந்த அதிபர்கள்
- எஸ்.ஏ. மக்பூல் மௌலானா 1973 - 1980
- எம்.ஐ.எம். ஹபீள் 1980.10.14 - 1999.12.22
- மௌலவி எம்.எம். ஹுஸைர்
- எம். புனானி
- எம். எச். முஹம்மத்
- எம்.எம். இஹ்ஸான்
- ஏ.எச்.எம். யூசுபு
- எம்.எஸ்.எம். இர்பான்
- எம்.எஸ்.எம். ஹிப்ளர் (2014.09...)
பாடசாலைக் கீதம்
அருளன்பு நிறைந்தவனே
அகமேல் ஒளிசெய்பவனே
கரமேந்தி உனைத் தொழுதோம்
கருணை மழையே பொழிவாய்!
கலைஜோதி நிலா எனவே
கறை நீங்கி அருள்மிகவே - இறைவா
நிலை மேவிய பண்புகளே
நிறைவாக்கிடுவாய் இறைவா!
அருளன்பு நிறைந்தவனே
அகமேல் ஒளிசெய்பவனே
கரமேந்தி உனைத் தொழுதோம்
கருணை மழையே பொழிவாய்!
உயர்தெங்கு வளம் தருமே
ஒளிசேர் மதுராப்புரமே - இறைவா
அஸ்ஸபா எங்கள் அறிவகமே
அணிசேர்த்திடுவாய் இறைவா!
அருளன்பு நிறைந்தவனே
அகமேல் ஒளிசெய்பவனே
கரமேந்தி உனைத் தொழுதோம்
கருணை மழையே பொழிவாய்!
அறிவின் கடலாய்த் திகழ்ந்தார்
அருமேதை கஸ்ஸாலி இமாம் -இறைவா
அதிலோர் துளியைத்தானும்
அடைந்தோங்க அருள் இறைவா!
அருளன்பு நிறைந்தவனே
அகமேல் ஒளிசெய்பவனே
கரமேந்தி உனைத் தொழுதோம்
கருணை மழையே பொழிவாய்!
மேற்கோள்
- "வெலிப்பிட்டிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலைகள்". பார்த்த நாள் 29 சூன் 2015.
http://noolaham.net/project/44/4371/4371.html - மாத்தறை மாவட்ட முஸ்லிம்கள்
https://kalaimahanfairooz.blogspot.com/2004/04/blog-post.html- அற்புத வளர்ச்சிபெறும் அறிவு நிலையம் அஸ்ஸபா