அஷ்டாவதானம் சபாபதி முதலியார்

அஷ்டாவதானம் சபாபதி முதலியார் என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் பலவகை செய்யுள் நூல்களை இயற்றிய புலவர்களுள் ஒருவர்.இவர் சந்தப் பாடல்களை விரைவாகப் பாடுவதில் வல்லவர்.[1] தலபுராணம், கலம்பகம் உள்ளிட்ட பொருள்களில் 33 நூல்கள் எழுதியுள்ளார்.

இளமையும் கல்வியும்

இவர் சென்னைப் புரசைவாக்கத்தில் பிறந்தவர்.அங்குத் தாண்டவராய முதலியாரிடத்தும் மழவை மகாலிங்கையரிடத்தும் தமிழ் கற்றார்.இவர் அஷ்டாவதானம் செய்வதில் வல்லவர்.புரசைவாக்கம்,மயிலாப்பூர்,புதுச்சேரி,மதுரை முதலான இடங்களில் அஷ்டாவதானம் செய்து காட்டியுள்ளார். இவர் தாம் இயற்றிய திருப்போரூர்ப் புராணத்தைத் திருப்போரூர் முருகன் கோவிலில் அரங்கேற்றினார்.

இயற்றிய நூல்கள்

திருப்போரூர் முருகன் மீது குறவஞ்சி, கலம்பகம்,யமகவந்தாதி, வெண்பாமாலை, நான்மணிமாலை,திரிபந்தாதி,இருசொல் யமகவந்தாதி,சதகம் முதலிய நூல்கள் இயற்றியுள்ளார்.

  • சிதம்பர சுவாமிகள் சரித்திரம்
  • திருத்தணிகை இரட்டை மணிமாலை
  • பழனி வெண்பாமாலை
  • திருவொற்றியூர் வடிவுடையம்மன் பதிற்றுப்பத்தந்தாதி
  • அருணை வெண்பாமாலை
  • மயிலை வெண்பாமாலை
  • காஞ்சிக் குமரக்கோட்டம் கலம்பகம்
  • கந்தசுவாமி புராணம்.

இயற்றிய உரைகள்

  • திருப்போரூர் புராண வசனம்
  • திருத்தணிகையாற்றுப்படை
  • கந்தரனுபூதி விருத்தியுரை
  • மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் உரை.

மறைவு

இவர் 1886 ஆம் ஆண்டு மறைந்தார்.

உசாத்துணை

1) மயிலை சீனி.வேங்கடசாமி, " பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் "- மெய்யப்பன் தமிழாய்வகம்-2001 2) தினமலர் - வாரமலர் 11.9.2015.

மேற்கோள்கள்

  1. மு.வரதராசன் (1994). தமிழ் இலக்கிய வரலாறு. சாகித்திய அகாதெமி. பக். 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7201-164-4.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.