அவாயித் தீவுகள்

அவாயித் தீவுகள் (ஃகவாயித் தீவுகள், ஹவாய்த் தீவுகள்; அவாயி மொழியில் மொக்குப்புனி ஒ அவாயி) என்பன வடக்கு பசிபிக் கடலில் உள்ள எட்டுத் பெரிய தீவுகளும், மிகப்பல சிறு நிலத்திட்டுகளும் கொண்ட ஒரு தீவுக்கூட்டம். இத் தீவுக் கூட்டம் ஏறத்தாழ 2,400 கி.மீ நீளம் உடையது. இத்தீவுக் கூட்டங்களில், மிடுவே குறுந்தீவுக்கூட்டம் (Midway atoll) எனப்படும் பகுதி தவிர மற்றவை ஐக்கிய அமெரிக்காவின் அவாயி என்றழைக்கப்படும் ஒரு மாநிலம். ஒரு காலத்தில் இதனை சாண்டுவிச் தீவுகள் (Sandwich Islands) என்று அழைத்தார்கள். அவாயித் தீவுகள் வட அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஏறத்தாழ 1860 மைல் (2993 கி.மீ) தொலைவில் உள்ளது.[1]

அவாயித் தீவுகள்
Mokupuni o Hawai‘i
செயற்கைத் துணைக்கோள் வழி பெற்ற அவாயித் தீவுகளின் உண்மைநிறப் படம்
அவாயித் தீவுகளின் தென் முனையில் இருந்து வடமேறாக திசையில் 1500 மைல் நீளத்தில் விரிந்துள்ள அமைப்பைக் காட்டும் நிலப்படம்.
Geography
Locationவடக்கு பசிபிக் பெருங்கடல்
Highest pointமவூனா கீல்
4205 மீ (13796 அடி)

தீவுகளும் பவளப்பாறைகளும்

மீகாமன் சேம்சு குக் இந்தத் தீவுகளுக்கு சனவரி 18, 1778 இல் வருகை தந்தார், அப்பொழுது அவருடைய முன்னாள் முதலளித்து ஊக்குநராக இருந்த சாண்டுவிச்சின் நான்காவது ஏர்ல் ஆக இருந்த சான் மாண்டேகு (John Montagu, 4th Earl of Sandwich) அவர்களின் நினைவாக சாண்டுவிச்சுத் தீவுகள் என்று பெயரிட்டார் [2]

அவாயித் தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 16,636.5 சதுர கி,மீ ( 6,423.4 சதுர மைல்) மிடுவே கடற்திட்டு வரிசை (Midway atoll) என்னும் பகுதி தவிர, மற்றவை ஐக்கிய அமெரிக்காவின் 50 ஆவது மாநிலமாக அவாயி மாநிலம் என்னும் பெயரில் ஆகத்து 21, 1959 இல் இணைந்தது.

முதன்மையான தீவுகள்

நாசாவின் செயற்கைத் துணைக்கோள் படம். இதனை விண்வெளியில் இருந்து எடுத்தனர். முக்கிய அவாயித் தீவுகளும் தீவுக்கூட்டங்களும் தெரிவதைப் பார்க்கலாம்.

முக்கியமான எட்டுத் தீவுகளை மட்டுமே இங்கே குறிக்கப்பெற்றுள்ளன. இவை அவாயி விண்டுவர்டுத் தீவுகள் ( Hawaiian Windward Islands) என்றும் அழைக்கப்பெறுகின்றன. கஃகோ ஒலாவே (Kahoʻolawe) என்னும் தீவைத் தவிர மற்ற தீவுகளில் மக்கள் வாழ்கின்றனர்.

தீவு சுருக்கப்பெயர் அமைவிடம் பரப்பு யாவற்றிமும் உயரமான இடம் கடற்பரப்பில் இருந்து உயர மக்கள் தொகை
(2010 காலப்பகுதியில்)
அடர்த்தி
அவாயி[3] பெரிய தீவு (த பிக்கு ஐலண்டு) 19°34′N 155°30′W 1 4,028.0 sq mi (10,432.5 km2) மவுனா கியா 1 13,796 ft (4,205 m) 185,079 4 45.948/sq mi (17.7407/km2)
குவாயி [4] தோட்டத் தீவு (தி கார்டன் ஐல்) 22°05′N 159°30′W 4 552.3 sq mi (1,430.5 km2) கவாயிக்கினி 3 5,243 ft (1,598 m) 66,921 3 121.168/sq mi (46.783/km2)
கஃகூலவெலாவே [5] த டார்கெட்டு ஐல் 20°33′N 156°36′W 8 44.6 sq mi (115.5 km2) பூஉ மோஆவுலானுயி 7 1,483 ft (452 m) 0 8 0
இலானாயி[6] அன்னாசித் தீவு (த பைனாப்பிள் ஐல்) 20°50′N 156°56′W 6 140.5 sq mi (363.9 km2) இலானாயிஃகாலே 6 3,366 ft (1,026 m) 3,135 6 22.313/sq mi (8.615/km2)
மாவூயி[7] பள்ளத்தாக்குத் தீவு (த வாலி ஐல்) 20°48′N 156°20′W 2 727.2 sq mi (1,883.4 km2) அலேயக்காலா 2 10,023 ft (3,055 m) 144,444 2 198.630/sq mi (76.692/km2)
மொலாக்காயி[8] நட்புத் தீவு (த பிரண்ட்லி ஐல்) 21°08′N 157°02′W 5 260.0 sq mi (673.4 km2) காமக்கௌ 4 4,961 ft (1,512 m) 7,345 5 28.250/sq mi (10.9074/km2)
நிஇஃகாவு[9] தடுக்கப்பட்டத் தீவு (த ஃவர்பிடன் ஐல்) 21°54′N 160°10′W 7 69.5 sq mi (180.0 km2) பானீயாவு மலை 8 1,250 ft (381 m) 170 7 2.45/sq mi (0.944/km2)
ஓஆஃகு[10] கூடும் இடம் (த காதரிங் பிளேசு) 21°28′N 157°59′W 3 596.7 sq mi (1,545.4 km2) காஆலா மலை 5 4,003 ft (1,220 m) 953,207 1 1,597.46/sq mi (616.78/km2)

சிறிய தீவுகளும், கடற்திட்டுகளும், பவழப் பாறைகளும்

  • மொக்குமானா அல்லது நிஃகோவா (Nihoa, Mokumana)
  • மொக்குமானாமானா (நெக்கர் தீவு (Necker, Mokumanamana)
  • கானேமிலோஃகாயி அல்லது பிரான்சிய பிரிகேட்டு சோல்சு (French Frigate Shoals, Kānemilohaʻi)
  • புகாஃகோனு அல்லது கார்டனர் பின்னாக்கில்சு (Gardner Pinnacles, Pūhāhonu)
  • நாலுக்க்காக்கலா அல்லது மாரோ பவழப் பாறை (Maro Reef, Nalukākala)
  • அவுவோ அல்லது லேசான் (Laysan, Kauō)
  • பாப்பா ஆப்பொஃகோ அல்லது லிசியான்சிக்கித் தீவு (Lisianski Island, Papaʻāpoho)
  • ஃகோலோய்க்குவானா அல்லது பெர்லும் க்ஃஎம்சும் கடற்த்திட்டுகள் (Pearl and Hermes Atoll, Holoikauaua)
  • பிஃகேமானு அல்லது மிடுவே கடற்திட்டு வரிசை (Midway Atoll
  • [மொக்குபாப்பா (Kure Atoll, Mokupāpapa)

அலை சறுக்கு

இந்த தீவின் பழங்குடி இன மக்களின் பாரம்பரிய விளையாட்டான அலைச்சறுக்கு (Surfing) விளையாட்டு உலகம் முழுவதும் பரவியுள்ளது. [11]

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

  1. Macdonald, Abbott, and Peterson, 1984
  2. James Cook and James King (1784). A Voyage to the Pacific Ocean: Undertaken, by the Command of His Majesty, for Making Discoveries in the Northern Hemisphere, to Determine the Position and Extent of the West Side of North America, Its Distance from Asia, and the Practicability of a Northern Passage to Europe: Performed Under the Direction of Captains Cook, Clerke, and Gore, in His Majesty's Ships the Resolution and Discovery, in the Years 1776, 1777, 1778, 1779, and 1780. 2. Nicol and Cadell, London. பக். 222. http://books.google.com/?id=O5AqNKtDqX0C&pg=PA222.
  3. U.S. Geological Survey Geographic Names Information System: அவாயித் தீவு
  4. U.S. Geological Survey Geographic Names Information System: Kauaʻi Island
  5. U.S. Geological Survey Geographic Names Information System: Kahoʻolawe Island
  6. U.S. Geological Survey Geographic Names Information System: இலானா தீவு
  7. U.S. Geological Survey Geographic Names Information System: மாவூயித் தீவு
  8. U.S. Geological Survey Geographic Names Information System: மொலாக்காயித் தீவு
  9. U.S. Geological Survey Geographic Names Information System: நிஇஃகாவுத் தீவு
  10. U.S. Geological Survey Geographic Names Information System: ஓஆஃகுத் தீவு
  11. விளையாட்டு பிரியர்களை கவர்ந்திழுக்கும் ராமேசுவரம் தீவு: மீனவ இளைஞர்கள் வாழ்வும் உயரும்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.