அவள் வருவாளா

அவள் வருவாளா 1998 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். தெலுங்கில் வெளிவந்த பெள்ளி திரைப்படத்தை மையமாகக் கொண்டு ராஜ்கபூர் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக சிம்ரனும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசை அமைத்துள்ளார்.

அவள் வருவாளா
இயக்கம்ராஜ்கபூர்
கதைஸ்ரீநிவாச சக்கரவர்த்தி
திரைக்கதைராஜ்கபூர்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புசிம்ரன்
சுஜாதா
அஜித் குமார்
பிரித்வி
ஒளிப்பதிவுகே. பிரசாத்
படத்தொகுப்புலெனின் & விஜயன்
வெளியீடு15 மே 1998
ஓட்டம்145 நிமிடங்கள்
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

மதுரையில் அவரது பாட்டியுடன் வசித்து வரும் அஜித் குமார் (ஜீவா), முதல் பார்வையிலேயே பிடிக்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார். வங்கி மேலாளராக வேலை கிடைத்த பின்னர் சென்னை செல்லும் அவர், ஒரு பேரங்காடியில் சிம்ரனை (திவ்யா) பார்த்ததும் உடனடியாக காதல் கொள்கிறார். அவரது ஸ்கூட்டரை அடையாளமாக வைத்துக் கொண்டு அவரைத் தேடி அலையும் ஜீவா இறுதியாக நகைச்சுவையாளர்களால் (கவுண்டமணி, செந்தில், வெண்ணிற ஆடை மூர்த்தி, நர்ஸ் டக்கரா, கோவை சரளா) சூழப்பட்ட ஒரு காலனியை அடைகிறார். அவர் தேடி வந்த சிம்ரனின் ஸ்கூட்டர் போல அங்கே நிற்கும் ஸ்கூட்டரை நோட்டமிடும் ஜீவாவை, ஸ்கூட்டர் திருடன் என அந்த காலனி மக்கள் சூழ்ந்து கொள்ள, உடனே ஜீவா வாடகைக்கு வீடு தேட வந்ததாக பொய் சொல்கிறார். திவ்யாவும், அவரது தாயாரும் (ஜானகி) அந்த காலனியில் தான் வசிக்கிறார்கள் என தெரிந்ததும், அங்கே குடியேற சம்மதிக்கிறார்.

ஜீவா அங்கே குடிவந்த பின்னர், திவ்யாவின் மனதை கவர முயற்சி செய்கிறார். இதை அறிந்து கொண்ட நகைச்சுவையாளர் கும்பல் ஜீவா, திவ்யாவின் மனதை கவர ஜீவாவுக்கு உதவுகிறார்கள். அவர்கள் திவ்யாவின் திருமணத்தைப் பற்றி ஜானகியிடம் கேட்க, எனினும், திவ்யா தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி ஏற்க மறுத்து விட்டார்.

நடிகர்கள்

பாடல்கள்

எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்கள் அவர் ஏற்கனவே இசையமைத்த தெலுங்கு திரைப்படத்தின் பாடல்களாகும். இத்திரைப்படத்தின் பாடல்களைக் கவிஞர் பழனிபாரதி எழுதியுள்ளார்.[1]

எண்பாடல்பாடியவர்கள்
1"சிக்கிமுக்கி உய்யாலா"எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
2"இது காதலின் சங்கீதம்"ஜெயச்சந்திரன்
3"காதல் என்ன கண்ணாமூச்சி"எஸ். பி. பாலசுப்பிரமணியம்
4"ஓ வந்தது பெண்ணா"ஹரிஹரன்
5"ருக்கு ருக்கு ருக்குமணி "மனோ
6"சேலையில வீடு கட்டவா"உன்னிகிருஷ்ணன், சித்ரா

மேற்கோள்கள்

  1. "Aval Varuvala Songs". List of Aval Varuvala Songs. மூல முகவரியிலிருந்து 28 May 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 June 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.