அவன்தான் மனிதன்
அவன்தான் மனிதன் 1975 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா, ஜெயலலிதா, ஆர். முத்துராமன், சோ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2]
அவன்தான் மனிதன் | |
---|---|
![]() சுவரொட்டி | |
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | ஏ. ராமாநுஜம் |
கதை | ஜி. பாலசுப்பிரமணியம் |
திரைக்கதை | பஞ்சு அருணாசலம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் மஞ்சுளா ஜெயலலிதா ஆர். முத்துராமன் சோ |
ஒளிப்பதிவு | எம். விஸ்வநாத் ராய் |
படத்தொகுப்பு | பி. கந்தசாமி |
கலையகம் | ராசி என்டர்பிரைசஸ் |
வெளியீடு | ஏப்ரல் 11, 1975 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் ஆக ரவிகுமாா்
- மஞ்சுளா ஆக மஞ்சு
- ஜெயலலிதா ஆக லலிதா
- ஆர். முத்துராமன் ஆக சந்திரன்
- மேஜர் சுந்தரராஜன் ஆக முருகன்
- ஜே. பி. சந்திரபாபு ஆக சிங்காரம்
- எம். ஆர். ஆர். வாசு ஆக பரமசிவம்
- சோ ஆக அப்பாவு
- சச்சு ஆக கமலா
- சுமதி ஆக செல்வி
தயாரிப்பு விபரம்
திரைப்படத் தயாரிப்பாளர் நூர் ஒரு கதையை ஜி. பாலசுப்பிரமணியத்திடமிருந்து வாங்கினார். சிவாஜி கணேசனை நடிக்க வைத்து அதைத் திரைப்படமாக்க விரும்பினார். ஆனால் கதாநாயகன் இறக்கும் துன்பியல் முடிவைக் கதை கொண்டிருந்ததால் சிவாஜி நடிக்கச் சம்மதிக்கவில்லை. பின்னர் இந்தக் கதை கஸ்தூரி நிவாச என்ற பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக தயாரானது. ராஜ்குமார் பிரதான பாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றது. பின்னர் சிவாஜி கணேசன் அதனைத் தமிழில் தயாரிக்கும் உரிமையை ₹2 லட்சத்திற்கு வாங்கினார்.[3][4]
பாடல்கள்
திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். கண்ணதாசன் பாடல்களை இயற்றினார்.
அவன்தான் மனிதன் பாடல்கள்[5] | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
எண் | தலைப்பு | பாடலாசிரியர் | பாடகர்/கள் | நீளம் | |||||
1. | "எங்கிருந்தோ ஒரு குரல்" | கண்ணதாசன் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04.24 | |||||
2. | "அன்பு நடமாடும்" | கண்ணதாசன் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04.40 | |||||
3. | "ஆட்டுவித்தால் யாரொருவர்" | கண்ணதாசன் | டி. எம். சௌந்தரராஜன் | 04.09 | |||||
4. | "ஊஞ்சலுக்கு" | கண்ணதாசன் | டி. எம். சௌந்தரராஜன் | 05.38 | |||||
5. | "மனிதன் நினைப்பதுண்டு" | கண்ணதாசன் | டி. எம். சௌந்தரராஜன் | 04.52 | |||||
6. | "ஆ... எங்கிருந்தோ ஒரு குரல்" | கண்ணதாசன் | வாணி ஜெயராம் | 04.20 | |||||
7. | "ஜலிதா வனிதா (ஊஞ்சலுக்கு)" | கண்ணதாசன் | டி. எம். சௌந்தரராஜன் | 05.44 |
சான்றாதாரங்கள்
- "Avanthan Manithan". filmibeat.com. பார்த்த நாள் 2016-11-9.
- "Avanthan Manithan". spicyonion.com. பார்த்த நாள் 2016-11-9.
- "Kasturi Nivasa 1971". தி இந்து. மூல முகவரியிலிருந்து 3 அக்டோபர் 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 நவம்பர் 2016.
- "Sivaji Ganesan passed up on the offer". தி இந்து. மூல முகவரியிலிருந்து 9 நவம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 நவம்பர் 2016.
- "Avanthan Manithan Songs". saavn.com. மூல முகவரியிலிருந்து 2016 நவம்பர் 9 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-11-9.