அழகிய பெரியவன்
அழகிய பெரியவன் (azhagiya periyavan) தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல தளங்களில் இயங்குகிறார். தெளிந்த அரசியலோடு, தலித் மக்களின் பிரச்சினைகளை எழுதும் படைப்பாளிகளில் முக்கியமானவராக விளங்குகிறார். அழகிய பெரியவன் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார்.இவர் ‘தகப்பன் கொடி’ புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டும், 'உனக்கும் எனக்குமான சொல்'கவிதை நூலுக்காக 2010 ஆம் ஆண்டும் இரண்டு முறை தமிழக அரசின் விருது பெற்றவர். அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். முன்பு இவர் முழுநேர எழுத்தாளராக இயங்கினார்.
பிறப்பு
அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன் ஆகும். இவருடைய தாய் மாமா ஒருவர் மரபுக்கவிஞராக இருந்தார். அவர் ,நா.பார்த்தசாரதி அவர்கள் எழுதிய குறிஞ்சிமலர் என்ற புதினத்தைப்படித்து அதனால் கவரப்பட்டு அப்புதினத்தின் நாயகனான அரவிந்தன் என்ற பெயரை இவருக்கு வைத்தார். அழகிய பெரியவன் மார்ச் மாதம் மூன்றாம் நாள் 1968 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஆகும். இவரின் தந்தை சி.சின்னதுரை மற்றும் தாயார் கமலம்.
கல்வி
இவர் தனது கிராமமான கள்ளிப்பேட்டைக்கு அருகில் உள்ள சாத்கர் என்ற கிராமத்தில் இருக்கும் அரசு நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையில் படித்தார். பின்னர் ஆம்பூருக்கு அருகில் உள்ள தேவலாபுரம் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும் பின்னர் ஆம்பூரில் இருக்கும் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை பள்ளி வகுப்பு வரையிலும் படித்தார்..தனது இளம் அறிவியல் பட்டப்படிப்பை விலங்கியலை முதன்மைப்பாடமாகக்கொண்டு வேலூரில் இருக்கும் ஊரீசு கல்லூரியில் படித்து முடித்தார். பின்னர் கல்வியியலில் ஒரு பட்டத்தை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், முதுகலை தமிழ் பட்டத்தை சென்னைப்பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.
எழுத்துப்பணி
அழகிய பெரியவன் தனது கல்லூரி காலத்திலிருந்தே எழுதுகிறார். முதன்முதலாக மேல்நிலைப்பள்ளி வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோதே இவர் சில சிறுகதைகளை எழுதிப்பார்த்திருக்கிறார்.நிழல் என்ற பெயரில் கையெழுத்து இதழ் ஒன்றை நடத்தியிருக்கிறார். இவர் எழுதிய 'கூடடையும் பறவைகள்' என்ற சிறுகதை முதன்முதலாக 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தாமரை இதழில் வெளியானது.தமிழின் முன்னணி பத்திரிகைகளிலும் இலக்கிய இதழ்களிலும் எழுதிவருகின்றார்.
விருதுகள்
அழகிய பெரியவன் தன்னுடைய படைப்புகளுக்காக பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, தினமணி ஆக்சஸ் கவிதைப்பரிசு,கணையாழி சம்பா நரேந்தர் குறுநாவல் பரிசு,கலை இதழ் பரிசு, கலை இலக்கிய பெருமன்ற பரிசு, தமுஎகச வழங்கும் சு.சமுத்திரம் சிறுகதை நினைவுப்பரிசு,தினமணி நெய்வேலி சிறுகதை பரிசு,சுஜாதா உயிர்மை விருது, பொ.மா.சுப்பிரமணியம் அறக்கட்டளை விருது, சிற்பி கவிதை விருது, எஸ்.ஆர்.வி தமிழ் விருது, களரி வழங்கும் கு. அழகிரிசாமி சிறுகதை விருது, தலித் முரசு கலை இலக்கிய விருது, இந்தியா டுடே எதிர்கால நாயகர் விருது, திராவிடர் கழகம் வழங்கும் பெரியார் விருது ஆகியவற்றை பெற்றிருக்கிறார்.
2003 ஆண்டு 'தகப்பன் கொடி' புதினத்துக்கும், 2010 ஆம் ஆண்டு 'உனக்கும் எனக்குமான சொல்' என்ற கவிதை நூலுக்கும் தமிழக அரசின் விருதினை பெற்றுள்ளார்.
பிற சிறப்புகள்
அழகிய பெரியவன் எழுதிய 'குறடு' என்ற சிறுகதை 'நடந்த கதை' என்ற பெயரில் பொன்.சுதா என்பவரால் குறும்படமாக்கப்பட்டு பல பரிசுகளை பெற்றுள்ளன. இவருடைய மற்றொரு சிறுகதையான 'கண்காணிக்கும் மரணம்' என்ற சிறுகதையும் ஹரி என்பவரால் அதே பெயரில் குறும்படமாக்கப்பட்டுள்ளது. அம்ஷன் குமார் அவர்கள் இயக்கியுள்ள 'மனுசங்கடா' என்ற திரைப்படத்துக்கு துணை திரைக்கதை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
அழகிய பெரியவனின் படைப்புகளில் பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு எம்.பில்.பி.எச்.டி பட்டங்களைப் பெற்றுள்ளார். இவரின் பல்வேறு படைப்புகள் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தின் தமிழ்ப்பாடத்திட்டத்தில் மேல்நிலைப்பள்ளி அளவிலும் கல்லூரி அளவிலும் இவருடைய சிறுகதைகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய 'ஏதிலிக்குருவிகள்' என்ற கவிதையை தமிழ்நாடு அரசு பதினோராம் வகுப்பு தமிழ்ப்பாடநூலில் பாடமாக சேர்த்துள்ளது.
இவருடைய பல கதைகளும் கவிதைகளும் ஆங்கிலம், செக், இந்தி, உருது, வங்காளம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
படைப்புகள்
- தகப்பன் கொடி(புதினம்) முதற் பதிப்பு 2002.;தமிழினி பதிப்பகம்,சென்னை 14,இரண்டாம் பதிப்பு 2010;ஆழி பதிப்பகம்,சென்னை 24,விலை 250,பக்கம் 280 ISBN 978-93-80244-24-2
- வல்லிசை(புதினம்):முதற்பதிப்பு 2017;நற்றிணைப் பதிப்பகம்,சென்னை 5;விலை:240,பக்கம் 320;ISBN 978-82648-43 பிழையான ISBN-7 / www.natrinaibooks.com
- தீட்டு(சிறுகதைகள்) முதற் பதிப்பு 2000;தமிழினி பதிப்பகம்,சென்னை 14;விலை 50;பக்கம் 127, {{ISBN|81-87641-14-2}}
- அழகிய பெரியவன் சிறுகதைகள்(சிறுகதைகள்):முதற் பதிப்பு 2002;.ராஜராஜன் பதிப்பகம்,சென்னை 17;விலை 55;பக்கம் 144;ISBN 000710
- நெரிக்கட்டு (சிறுகதைகள்):முதற் பதிப்பு 2004,யுனைடட் ரைட்டர்ஸ்,சென்னை 14.
- கிளியம்மாவின் இளஞ்சிவப்பு காலை (சிறுகதைகள்): முதற் பதிப்பு 2008; தென்திசைப் பதிப்பகம், சென்னை 17; பக்கம் 112 / www.thenthisai.com
- சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்(சிறுகதைகள்):முதற் பதிப்பு 2011; நற்றிணைப்பதிப்பகம், சென்னை 5;விலை 100;பக்கம் 144.
- அழகிய பெரியவன் கதைகள் (முழு தொகுப்பு):முதற் பதிப்பு 2013, நற்றிணைப்பதிப்பகம், சென்னை 5;விலை 650;பக்கம் 702 ISBN 978-93-82648-76-5 .
- குறடு (சிறுகதைகள்) தொகை நூல்,முதற் பதிப்பு 2010, கலப்பை பதிப்பகம்,சென்னை 26 www.kalappai.in
- திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்(குறு நாவல்கள்):முதற் பதிப்பு 2010, கருப்புப்பிரதிகள் பதிப்பகம், சென்னை 5,விலை 120;பக்கம் 142 e-mail ; karuppupradhigal@gmail.com
- நீ நிகழ்ந்தபோது (கவிதைகள்) :முதற் பதிப்பு 2000; தமிழினி பதிப்பகம், சென்னை 14,விலை 15;பக்கம் 59;ISBN 81-87641-21-5.
- அரூப நஞ்சு (கவிதைகள்):முதற் பதிப்பு 2004; தமிழினி பதிப்பகம் ,சென்னை.14;விலை 30;பக்கம் 63 ISBN 81-87641-73-8
- உனக்கும் எனக்குமான சொல் (கவிதை); முதற் பதிப்பு டிசம்பர் 2008; ஆழி பதிப்பகம், சென்னை 24; பக்கம் 200; ISBN 81-907523-4-0
- ஞாபக விலங்கு (கவிதைகள்) :முதற் பதிப்பு 2016, கருப்புப்பிரதிகள் பதிப்பகம், சென்னை 5; விலை90;பக்கம் 118 ISBN 978-81-929715-9-9
- வெக்கங்கட்ட நாடு (கட்டுரைகள்) :முதற் பதிப்பு 2004, புத்தா வெளியீட்டகம், கோயம்புத்தூர் 15,விலை 50,பக்கம் 119 .
- மூடிய முகங்களில் (கட்டுரைகள்):முதற்பதிப்பு 2008, என்.சி.பி.எச் பதிப்பகம், சென்னை 98,விலை 40,பக்கம் 88 ISBN 978-81-234-1467-6.
- மீள் கோணம் (கட்டுரைகள்):முதற் பதிப்பு 2009, கருப்புப்பிரதிகள் பதிப்பகம்,சென்னை 5,விலை 100,பக்கம் 200 .
- பெருகும் வேட்கை(கட்டுரைகள்):முதற் பதிப்பு 2010, உயிர்மை பதிப்பகம், சென்னை 18,விலை 100,பக்கம் 168 ISBN 978-93-81095-11-9 www.uyirmmai.com.
- தேநீர் மேசை (கட்டுரைகள்) :முதற் பதிப்பு 2015, நற்றிணைப்பதிப்பகம், சென்னை 5,விலை 70,பக்கம் 80 ISBN 978-93-82648-22-2.
- கம்பளிப்பூச்சி இரவு (கட்டுரைகள்) :முதற் பதிப்பு 2010, சாளரம் பதிப்பகம், சென்னை.91,விலை 65,பக்கம் 103
- மறைத்துப்பேச என்ன இருக்கு?(நேர் காணல்கள்) :முதற் பதிப்பு 2017,என்.சி.பி.எச்,சென்னை 98.
சான்றுகள்
1.http://enabled.in/wp/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%85%E0%AE
2.https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-271/
3.https://tamil.thehindu,com/general/literature
4.https://www.youtube.com/watch?v=xOXEboTXPxE
வெளி இணைப்புகள்
- அழகிய பெரியவன் - கீற்று.காம்
- ஆனந்த விகடனில் அழகிய பெரியவன்
- பெருகும் வேட்கை கட்டுரைத் தொகுப்பைப் பற்றிய வாசகர் பரிந்துரை.