அல்லா கெனெரிகோவ்னா மாசேவிச்
அல்லா கெனெரிகோவ்னா மாசேவிச் (Alla Genrikhovna Masevich) (அக்தோபர் 9, 1918 — மே 6, 2008) ஒரு சோவியத் உருசிய வானியலாளர் ஆவார். இவர் மாஸ்கோ அரசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தன் இளவல் பட்டம் பெற்றார். இவர் 1952 இல் சோவியத் அறிவியல் கல்விக்கழகத்தின் வானியல் மன்ற உதவித் தலைவராக இருந்தார். இவர் விக்தர் அம்பர்த்சுமியானுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார். இவர் 1972 இல் மாஸ்கோ புயலக்கை, புவிப்பரப்பியல் நிறுவனத்தில் புவியளக்கையியல் பேராசிரியராக விளங்கினார்.[1]
இவர் முதல் உருசியச் செயற்கைக்கோள்களை (1956-57) வானில் நோக்கும் குழுக்களை உருவாக்கினார்.
மேற்கோள்கள்
- History of Astronomy An Encyclopedia. Garland Publishing. 1997. பக். 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8153-0322-X.
தகவல் வாயில்கள்
- Karl Ledersteger, in Astronomische und Physikalische Geodäsie (Erdmessung). Band V von Jordan-Eggert-Kneissl, Handbuch der Vermessungskunde. Verlag J. B. Metzler, Stuttgart 1969, DNB 456892842.
- A.G.Massewitsch (1957): Aufbau und Evolution der Unterriesen
- JPL-Datenbank: Asteroid 1904 Massevitch (1972 JM)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.