அல்துபைட்டு
அல்துபைட்டு (Althupite) என்பது AlTh(UO2)7(PO4)4O2(OH)5·15H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். அரியவகை அலுமினியம் தோரியம் யுரேனைல் பாசுப்பேட்டுக் கனிமமாக இக்கனிமம் கருதப்படுகிறது. பெக்மாடைட்டு என்ற தீப்பாறை வகையிலிருந்து இக்கனிமம் கிடைக்கிறது. அலுமினியம், தோரியம், யுரேனியம் மற்றும் பாசுப்பரசு ஆகிய தனிமங்களின் ஆங்கிலப் பெயர்களிலிருந்து அல்துபைட்டு என்ற பெயர் பெறப்பட்டுள்ளது[1][2][3].
மேற்கோள்கள்
- Piret P. and Deliens M. 1987: Les phosphates d'uranyle et d'aluminium de Kobokobo. IX. L'althupite AlTh(UO2)[(UO2)3O(OH)(PO4)2]2(OH)3•15H2O, nouveau minéral; propriétés et structure cristalline. Bulletin de Mineralogie, 110, 65-72
- http://www.mindat.org/min-149.html Mindat
- http://rruff.geo.arizona.edu/doclib/hom/althupite.pdf Handbook of Mineralogy
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.