அல் சுஃபி

அல் சுபி என அழைக்கப்படும் 'அப்தல் ரகுமான் அல்-சுஃபி (Abd al-Rahman al-Sufi, பாரசீகம்: عبدالرحمن صوفی; டிசம்பர் 9, 903 – மே 25, 986) என்பவர் பாரசீக[1][2] வானியல் வல்லுநர் ஆவார். இவர் அப்தல் ரகுமான் அபு அல்-உசைன், 'அப்துல் ரகுமான் சுஃபி, அசோபி என்ற பெயர்களிலும் அறியப்படுகிறார். இவரது நினைவாக நிலவுக் குழி ஒன்றுக்கு அசோபி எனவும், சிறிய கோள் ஒன்றுக்கு "12621 அல்சுபி" எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இவர் நாட்டுப்புறவியலிலும் தொன்மவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டிருந்ததால் வானியல் ஆய்வில் ஈடுபட்டார். கிபி 964 இல் இவர் "நிலையான உடுக்கள் பற்றிய நூல்" ஒன்றை எழுதினார். இந்நூலில் அவர் தனது கண்டுபிடிப்புகளை எழுத்திலும், படங்களாகவும் தந்திருந்தார்.[3][4] இவர் 1018 விண்மீன்களின் பருமைகளையும் (Magnitudes) நிறங்களையும் இருப்பிடங்களையும் அடக்கிய அட்டவணையை உருவாக்கி வெளியிட்டார்.

காட்சிமேடை

குறிப்புகள்

  1. Al-Qifti. Ikhbar al-'ulama' bi-akhbar al-hukama ("History of Learned Men"). In: Άbdul-Ramān al-Şūfī and his Book of the Fixed Stars: A Journey of Re-discovery by Ihsan Hafez, Richard F. Stephenson, Wayne Orchiston (2011). In: Orchiston, Wayne, Highlighting the history of astronomy in the Asia-Pacific region: proceedings of the ICOA-6 conference. Astrophysics and Space Science Proceedings. New York: Springer. ISBN 978-1-4419-8161-5. "... is the honored, the perfect, the most intelligent and the friend of the King Adud al-Dawla Fanakhasru Shahenshah Ibn Buwaih. He is the author of the most honored books in the science of astronomy. He was originally from Nisa and is of a Persian descent."
  2. Robert Harry van Gent. Biography of al-Sūfī. "The Persian astronomer Abū al-Husayn ‘Abd al-Rahmān ibn ‘Umar al-Sūfī was born in Rayy (near Tehrān) on 7 December 903 [14 Muharram 291 H] and died in Baghdād on 25 May 986 [13 Muharram 376 H] ... the Persian astronomer Abū al-Husayn ‘Abd al-Rahmān ibn ‘Umar al-Sūfī who was commonly known by European astronomers as Azophi Arabus". University of Utrecht, Netherlands. Retrieved 2014-1-11
  3. Abd al-Rahman al-Sufi, H. Suter, E.J. Brill's First Encyclopaedia of Islam 1913-1936, Vol. I, (Brill, 1987), 57.
  4. Abd al-Rahman al-Sufi, A Dictionary of Astronomy, ed. Ian Ridpath, (Oxford University Press, 1997), 456.

உசாத்துணைகள்

  • Mitton, Jacqueline (2007). Cambridge Illustrated Dictionary of Astronomy. Cambridge University Press. ISBN 978-0-521-82364-7

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.