அல் சிந்தகா சுரங்கப்பாதை
அல் சிந்தகா சுரங்கப்பாதை (Al Shindagha Tunnel) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு பெரிய அமீரகங்களில் இரண்டாவது பெரிய அமீரகமான துபாயில் உள்ள ஒரு சுரங்கப்பாதை ஆகும். 1975 ஆம் ஆண்டு இச்சுரங்கப் பாதை திறந்து வைக்கப்பட்டது. இரு வழிகளிலும் கிட்டத்தட்ட 55000 பேர் தினசரி பயணிக்கும் இப்பாதை மிகப் பழமையானதும் பரபரப்பானதுமான சுரங்கப்பாதையாகும்[1]. துபாய் தேய்ரா - அல் ராசு பகுதியையும், அல் சிந்தகா ஆகிய இரண்டு பகுதிக்கும் இடைப்பட்ட நீரோட்ட பகுதியை கடக்கும் ஒரு சுரங்கப்பாதை இதுவாகும்.
![]() அல்சிந்தகா சுரங்கப் பாதையின் கிழக்கு நுழைவாயில் | |
மேலோட்டம் | |
---|---|
வேறு பெயர்(கள்) | அமீரகத்தின் நீண்ட சுரங்கப்பாதை |
அமைவிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
ஆள்கூறுகள் | 25.272796°N 55.295048°E |
தற்போதைய நிலை | அனைவருக்கும் |
செய்பணி | |
மீள் கட்டுமானம் | இல்லை |
இயக்குபவர் | சாலைகள் மற்றும் போக்குவரத்து நிர்வாகம், துபாய் |
Traffic | தினசரி 55,000 வாகனங்கள் |
தொழினுட்பத் தகவல்கள் | |
தண்டவாளங்களின் எண்ணிக்கை | 4 (ஒவ்வொரு திசையிலும் இரண்டு பாதைகள்) |
தொழிற்படும் வேகம் | 60 கி.மீ/மணி |
சுரங்க விடுவெளி | 5 மீட்டர்கள் |
அமைப்பு
இந்த சுரங்கப்பாதை ஒவ்வொரு திசையிலும் இரண்டு பாதைகளாக, நான்கு பாதைகளைக் கொண்டுள்ளது. 5 மீட்டர் உயரமுள்ள வாகனங்கள் மட்டுமே இதன் வழி செல்ல முடியும். மேலும் இதில் வேகம் 60 கிமீ / மணி அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. [2]
சராசரியாக ஒரு நாளைக்கு 55,000 வாகனங்கள் இதில் பயணிக்கின்றன. துபாய் போக்குவரத்து ஆணையத்தின் கீழ் இது இயங்கிவருகின்றது.
சுரங்கப்பாதை கட்டப்பட்டு ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டதால் அதற்கு மாற்றாக பல வரிசைகளை கொண்ட நவீன பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. [3]
மேற்கோள்கள்
- "Shindagha Tunnel- 36 and going strong". Khaleej Times (22 August 2010).
- "சுரங்கப்பாதை கட்டுமானத்தின் போது". யூடியூப் வீடியோ.
- "Ruler of Dubai launches construction of Dh394m Shindagha Bridge project". thenational (May 19 2018).