அல் ஐன்

Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/United Arab Emirates" does not exist.

அல் எயின், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு நகரமாகும். நாட்டின் பெரிய அமீரகமான அபுதாபியில் அமைந்துள்ள இந்நகரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் நான்காவது பெரிய நகரமாகும். 2005 ஆம் ஆண்டில் கணிக்கப்பட்டபடி இதன் மக்கள் தொகை 421,948 ஆகும். இது ஓமான் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ளது. நாட்டின் ஏனைய முக்கிய நகரங்களைப் போல அல் எயின், ஒரு கரையோர நகரம் அல்ல. கடற்கரையிலிருந்து இது தொலைவில் அமைந்துள்ளது. கடற்கரையோர நகரங்களான அபுதாபி, துபாய் ஆகிய நகரங்களில் இருந்து ஏறத்தாழ ஒரேயளவு தொலைவில் (150 கிமீ) அமைந்துள்ள அல் எயின், அவ்விரு நகரங்களுடனும் ஒரு சமபக்க முக்கோணத்தை ஆக்குகின்றது.

வரலாறு

அல் எயின்

பாலைவனச் சோலையான இப்பகுதி, முற்காலத்தில் புரெய்மி (Buraimi) என அழைக்கப்பட்டது. தொடர்ச்சியாக 4000 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் வாழ்ந்த இடமாக இருந்து வந்திருப்பதாகக் கூறப்படும் இது, நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தின் மையமாகவும் கருதப்படுகின்றது. ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது ஜனாதிபதியான ஷேக் ஸயத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் பிறப்பிடமும் இதுவே. இன்று, அல் எயின் நகரத்தோடு சேர்ந்து, ஓமானின் எல்லைக்குள் அமைந்திருக்கும் நகரப்பகுதியே புரெய்மி என்று அழைக்கப்பட்டு வருகின்றது.

அல் எயினில் பல நீரூற்றுக்கள் அமைந்துள்ளன. இதனால்தான், முற்காலத்திலும் மக்கள் வாழ்வதற்குரிய இடமாக இது திகழ்ந்தது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.