அலைபாக்டீரியா

அலைபாக்டீரியா அல்லது மிதவைபாக்டீரியா என்பது பாக்டீரியாவில் உள்ள மிதவைவாழிகளாகும். இவை நீர்பரப்புகளில் அலைந்து/மிதந்து வாழ்கின்றன. இவை நன்னீர் மற்றும் கடல் நீர் இரண்டிலும் பரவலாக நுண்ணோக்கியின் துணையோடு காணலாம்.

பசிபிக் பெருங்கடலில் உள்ள மார்குசாசுத் தீவிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் தெறியும் ஒளிச்சேர்க்கை பிகோநுண்மிதவைவாழிகள் [காட்சி: மேல்மிளிர்வு நுண்ணோக்கியைக் கொண்டு (நீலவொளிர்வால்) எடுக்கப்பட்டது. இதில் தெறியும் காவி மிளிர்வுப்புள்ளி - சினிகோகாக்கசு என்னும் நீலப்பச்சைப்பாசி; சிவப்பு மிளிர்வுப்புள்ளி - பிகோயளவு மெய்க்கருவுயிர்கள்; வலது மேற்புறத்தில் காணப்படும் சிவப்புப் பெரியக்கலங்கள் - இருக்கலப்பாசிகளாகும்].

பண்புகள்

மிதவைபாக்டீரியா நீரில் வாழும் உயிர்களில் ஒரு குறிப்பிடப்படும் சூழலில் உள்ளது. பெரும்பாலும் இறந்தவைகளை உணவாக எடுத்துக்கொள்கின்றன. இவைகள் இறந்தவற்றில் இருந்து கரிம பொருட்களை உண்டு அது மறுசுழற்சியடையப் பெரிதும் உதவுகின்றன. இது மட்டுமின்றி இவைகள் வாழும் உயிர்களானப் பாசிகள், மீன்கள், ஆளிகள், மெல்லுடலிகள், பாலூட்டிகள் ஆகியன வெளியிடும் கரிம மற்றும் வேதிப்பொருட்களை மறுசுழற்சி மற்றும் நச்சுமுறிவு ஆகியவற்றில் பெரிதும் துணைசெய்கின்றன. வாழும்முறை பெரும்பாலும் தன்னூட்டமுறையாகவே இருக்கும்.

அதுமட்டுமல்லாது, அவைகள் தனித்தும் பல சமயங்களில் ஒட்டிக்கொண்டும் வாழக்கூடியவை. நுண்பாசிகளுடன் இணைந்து, பாசிகளுடன் அண்டி அல்லது கடல் பனி என அழைக்கப்படும் உயிர்க்கழிவுகள் (detritus)பொருட்களுடன் இணைந்து வாழ்கின்றன.

பிரிவுகள்

இவைகளில் பிரிவுகள் இன்னும் சரிவர வரையறுக்கப்படவில்லை. ஆனாலும் இவைகளில் பாக்டீரியாவும் - நீலப்பச்சைப்பாசி/பாக்டீரியாவும் பெரிதும் இடம் வகிக்கின்றன.

பாக்டீரியா - புரதபாக்டீரியா; பச்சை மற்றும் நீல கந்தக பாக்டீரியா (ஆனால் இவையிரண்டும் உயிர்வளி எதிரி) களாக உள்ளன. நீலப்பச்சைப்பாசி/நீலப்பச்சை பாக்டீரியா - ஆசிலட்டோரியா, ஃபார்மிடியம் - இழை வடிவம்; ப்ரொக்லோரோகாக்கசு மற்றும் சினிக்கோகாக்கசு - ஒருக்கல உயிரி.

ஒளிச்சேர்க்கை பாக்டீரியா மற்றும் வேதிச்சேர்க்கை பாக்டீரியாக ஆகிய இரண்டுப்பிரிவுகள் உள.

பயன்கள்

நீரில் வாழும் அலைவிலங்கிகளுக்கு இவையும் ஒரு முக்கிய இறையாகும். ஆகையால் அலைவிலங்கு வளர்ச்சியுறும் இவை மீன் மற்றும் இதரப் பேருயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து சுற்றுச்சூழலை நடுநிலையாக வைத்திருக்க உதவுகிறது.

இவை, உப்பிறப்புவளி நிலைத்தல்/நிலைநிறுத்தம் (நைதரசன் நிலைநிறுத்தம்) (nitrogen fixation), காலகமாக்கல்/நைதரசனாக்கம் (nitrification), காலகநீக்கம்/நைதரசனீக்கம் (denitrification), மறுதனிமமாற்றி (remineralisation), [[கொள்ளிவளியீனி பாக்டீரியா (methanogenesis) மற்றும் கொள்ளிவளிநீக்கி பாக்டீரியா (methonotrophy) ஆகியனவாகத் திகழ்கின்றன. சுற்றுச்சூழல் உருவாக்கத்தில் இவை இன்றியமையாதன ஆகும்.

மேற்கோள்கள்

  • Thurman, H. V. (1997). Introductory Oceanography. New Jersey, USA: Prentice Hall College. ISBN 0-13-262072-3.

காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.