அலாஸ்கா ஏர்லைன்ஸ்
அலாஸ்கா ஏர்லைன்ஸ் (Alaska Airlines) அமெரிக்காவின் பெரிய விமானச் சேவை நிறுவனங்களில் ஏழாவது இடத்தினைப் பெற்றுள்ளது. இது வாஷிங்கடனில் உள்ள சியாட்டிலை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. 1932 ஆம் ஆண்டு, மெக்கீ ஏர்வேஸ் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவப்பட்டது. நிறுவப்பட்டபோது அங்கோரேஜ் அலாஸ்காவில் இருந்து விமானங்களை செயல்படுத்தியது. இன்று அலாஸ்கா சுமார் நூறு இலக்குகளுக்கு மேற்பட்ட இலக்குகளைக் கொண்டு செயல்படுகிறது.
அலாஸ்கா ஏர்லைன்ஸ் மூன்று முக்கிய கூட்டணி விமானச் சேவைகளின் பகுதியாக இல்லை. ஆனால் பல நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் எல்ஏஎன் ஏர்லைன்ஸ் போன்றவை ஒன்வேர்ல்ட் கூட்டணியின் பகுதியாகும், டெல்டா ஏர்லைன்ஸ், ஏர் பிரான்ஸ் மற்றும் கொரியன் ஏர் போன்றவை ஸ்கை டீம் கூட்டணியின் பகுதியாகும். 2011 ஆம் ஆண்டு முதல், அலாஸ்கா ஏர் குழு, டோவ் ஜோன்ஸ் டிராண்போர்டேஷன் ஆவேரேஜ் குழுவில் உறுப்பினராக இருந்தது, பின்னர் ஏஎம்ஆர் கார்ப்பரேஷன் அதனை இடமாற்றம் செய்தது. வாஷிங்கடனின் சீ டாக் பகுதியினை தலைமையகமாகக் கொண்டு அலாஸ்கா ஏர்லைன்ஸ் செயல்படுகிறது.
இதன் விமானக் குழுவில் 139 விமானங்கள் உள்ளது. இது அலாஸ்கா ஏர் குழுவினை பெற்றோர் குழுவாகக் கொண்டுள்ளது. இதில் சுமார் 10239 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இது சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ், போர்ட்லாண்ட் மற்றும் அங்கோரேஜ் ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.[1]
கோட்ஷேர் ஒப்பந்தங்கள்
அலாஸ்கா ஏர்லைன்ஸ் உலகளாவிலான விமானச் சேவைக் கூட்டணியில் எவ்விதப் பங்கும் வகிக்கவில்லை. இருப்பினும் கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பல நிறுவனங்களுடன் பகிர்ந்துள்ளது. இந்த நிறுவனங்களில் பல நிறுவனங்கள் உலகளாவிலான கூட்டணியில் உள்ளவையாகும். அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் பின்வரும் நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது.
- ஏரோமெக்சிகோ
- ஏர் பிரான்ஸ்
- அமெரிக்கன் ஏர்லைன்ஸ்
- கதே பசுபிக்
- காண்டோர் பிலெக்ரெயின்ஸ்ட்
- டெல்டா ஏர் லைன்ஸ்
- எமிரேட்ஸ்
- பிஜி ஏர்வேஸ்
- கேஎல்எம்
- கொரியன் ஏர்
- பென்ஏர்
- குவாண்டாஸ்
- ரவ்ன் அலாஸ்கா
2008 ஆம் ஆண்டு முதல் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானங்கள் மற்றும் ஹரிசான் ஏர் விமானங்கள் ஒன்வேர்ல்ட் குழுமத்தின் ஒரு பகுதியாக அங்கம் வகித்து வருகிறது.[4][5]
விமானக் குழு
தற்போதைய விமான குழு
ஜூன் 2015 இன் படி அலாஸ்கா ஏர்லைன்ஸ் பின்வரும் விமானக் குழுவினைக் கொண்டுள்ளது.[6]
விமானம் | சேவையில்
இருப்பவை |
ஆர்டர் | பயணிகள் | ||
---|---|---|---|---|---|
முதல்
வகுப்பு |
பொருளாதாரம் | மொத்தம் | |||
போயிங்க்
737-400 |
21 | — | 12 | 132 | 144 |
போயிங்க்
737-400சி |
5 | — | — | 72 | 72 |
போயிங்க்
737-400எஃப் |
1 | — | சரக்கு
விமானம் | ||
போயிங்க்
737-700 |
14 | — | 12 | 112 | 124 |
போயிங்க்
737-700எஃப் |
— | 3 | சரக்கு
விமானம் | ||
போயிங்க்
737-800 |
61 | — | 16 | 147 | 163 |
போயிங்க்
737 மேக்ஸ் 8 |
— | 20 | அறிவிக்கப்பட
உள்ளது | ||
போயிங்க்
737-900 |
12 | — | 16 | 165 | 181 |
போயிங்க்
737-900 ஈஆர் |
25 | 40 | 16 | 165 | 181 |
போயிங்க்
737 மேக்ஸ் 9 |
— | 17 | அறிவிக்கப்பட
உள்ளது | ||
மொத்தம் | 139 | 77 |
விமானக் குழு வரலாறு
அலாஸ்கா
ஏர்லைன்ஸ் விமானக் குழு, ஏப்ரல் 1960 [7] | |
---|---|
விமானம் | மொத்தம் |
செஸ்னா
180 |
4 |
கர்டிஸ்
சி – 46 |
3 |
டௌக்ளஸ்
டிசி-4 |
2 |
டௌக்ளஸ்
டிசி-6ஏ |
3 |
நூர்டுய்ன்
நோர்ஸ்மான் |
6 |
ப்பைபர்
அபாச்சி |
1 |
மொத்தம் | 19 |
அலாஸ்கா
ஏர்லைன்ஸ் விமானக் குழு, மார்ச் 1970 [8] | |
போயிங்க்
727-100சி |
4 |
செஸ்னா
185 |
1 |
ஒருங்கிணைந்த
பி ப்பி ஒய் கடலினா |
4 |
கன்வாயர்
சிவி – 240 |
3 |
கன்வாயர்
சிவி – 240 |
1 |
க்ரம்மன்
கூஸ் |
14 |
லாக்ஹீட்
எல் – 100 ஹெர்குலெஸ் |
3 |
மொத்தம் | 30 |
அலாஸ்கா
ஏர்லைன்ஸ் விமானக் குழு, மார்ச் 1980 [9] | |
போயிங்க்
727–100 |
4 |
போயிங்க்
727-100சி |
3 |
போயிங்க்
727–200 |
4 |
மொத்தம் | 11 |
அலாஸ்கா
ஏர்லைன்ஸ் விமானக் குழு, மார்ச் 1990 [10] | ||
---|---|---|
விமானம் | மொத்தம் | ஆர்டர் |
போயிங்க்
727–100 |
4 | — |
போயிங்க்
727–200 |
26 | — |
போயிங்க்
737-200C |
7 | — |
மெக்டொனல்
டௌக்ளஸ் எம்டி - 82 |
8 | — |
மெக்டொனல்
டௌக்ளஸ் எம்டி-83 |
12 | — |
மொத்தம் | 57 | 0 |
அலாஸ்கா
ஏர்லைன்ஸ் விமானக் குழு, மார்ச் 2000 [11] | ||
போயிங்க்
737-200 சி |
4 | — |
போயிங்க்
737-200 க்யூசி |
4 | — |
போயிங்க்
737–400 |
40 | — |
போயிங்க்
737–700 |
6 | 13 |
போயிங்க்
737–900 |
— | 10 |
மெக்டொனல்
டௌக்ளஸ் எம்டி - 82 |
5 | — |
மெக்டொனல்
டௌக்ளஸ் எம்டி - 83 |
29 | — |
மொத்தம் | 88 | 23 |
உயர்தர வழித்தடங்கள்
போர்ட்லாண்ட் – சியாட்டில், சியாட்டில் – போர்ட்லாண்ட், டல்லஸ் ஃபோர்ட்வொர்த் – லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஸ்போகேன் – சியாட்டில் போன்ற வழித்தடங்களை உயர்தர வழித்தடங்களாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 178, 176, 105 மற்றும் 89 விமானங்களை அலாஸ்கா ஏர்லைன்ஸ் இயக்குகிறது. குறிப்பிட்ட காரணங்களுக்கு இயக்கப்படும் விமானங்களை புரேடோ வல்லார்டா – போர்ட்லாண்ட் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் – இஃக்ஸ்டாபா ஸிஹுவாடானேஜோ ஆகிய வழித்தடங்களுக்கு விமானங்களை அலாஸ்கா ஏர்லைன்ஸ் செயல்படுத்துகிறது.
குறிப்புகள்
- Hwang, Inyoung (November 30, 2011). "Alaska Air to Replace AMR in Dow Jones Transportation Average". Bloomberg Businessweek. Archived from the original on May 9, 2012. http://www.webcitation.org/67XesxuHg. பார்த்த நாள்: 10 July 2015.
- "Alaska and Horizon join oneworld's Global Explorer round-the-world fare". Oneworld (October 28, 2008). பார்த்த நாள் 10 July 2015.
- Oneworld. "oneworld – Global Explorer". பார்த்த நாள் 10 July 2015.
- "On-Board Alaska Airlines". cleartrtip.com. பார்த்த நாள் 10 July 2015.
- "World Airline Directory 1960". Flight International (April 8, 1960). பார்த்த நாள் 10 July 2015.
- "World Airline Directory 1970". Flight International (March 26, 1970). பார்த்த நாள் 10 July 2015.
- "World Airline Directory 1980". Flight International (July 26, 1980). பார்த்த நாள் 10 July 2015.
- "World Airline Directory 1990". Flight International (March 14, 1990). பார்த்த நாள் 10 July 2015.
- "World Airline Directory 2000". Flight International (March 21, 2000). பார்த்த நாள் 10 July 2015.