அலசான் வட்டாரா

அலசான் டிராமேன் வட்டாரா (Alassane Dramane Ouattara, பிறப்பு: 1 சனவரி 1942) ஐவரி கோஸ்ட் அரசியல்வாதியும் தற்போதைய அரசுத்தலைவரும் ஆவார். 2010 இல் நடந்த அரசுத்தலைவர் தேர்தலின் முதற்கட்ட வாக்கெடுப்பில், முதல் இரண்டு வேட்பாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் அரசுத்தலைவர் லோரண்ட் பாக்போவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக தேர்தல் கண்காணிப்புக் குழு, மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியவற்றினால் அங்கீகரிக்கப்பட்டு புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார். இவரது வெற்றியை பாக்போ ஏற்றுக்கொள்ள மறுத்து தொடர்ந்து அரசுத்தலைவராக இருந்து வந்தார். இதனை அடுத்து அங்கு அரசியல் குழப்பநிலை உருவானது. பாக்போவுக்கு ஆதரவான படைகளுக்கும், வட்டாராவுக்கு ஆதரவானவர்களுக்கும் இடையில் சண்டை மூண்டது. 2011 ஏப்ரல் 11 ஆம் நாள் பிரெஞ்சு இராணுவத்தினரின் தாக்குதலை அடுத்து பாக்போ சரணடைந்தார்.

அலசான் வட்டாரா
Alassane Ouattara
கோட் டிவாரின் 4வது அரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
4 திசம்பர் 2010*
முன்னவர் லோரண்ட் பாக்போ
கோட் டிவாரின் பிரதமர்
பதவியில்
7 நவம்பர் 1990  9 திசம்பர் 1993
குடியரசுத் தலைவர் பெலிக்ஸ் ஹூபொயே-பொய்னி
முன்னவர் பெலிக்ஸ் ஹூபொயே-பொய்னி
பின்வந்தவர் டானியல் கப்லான் டன்கன்
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சனவரி 1942 (1942-01-01)
டிம்போக்ரோ, பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா (தற்போதைய ஐவரி கோஸ்ட்)
அரசியல் கட்சி குடியரசுவாதிகளின் முன்னணி
வாழ்க்கை துணைவர்(கள்) டொமினிக் வட்டாரா
படித்த கல்வி நிறுவனங்கள் டிரெக்செல் பல்கலைக்கழகம்
பென்சில்வேனியா பல்கலைக்கழகம்
சமயம் இசுலாம்
*லோரண்ட் பாக்போவுக்கும் வாட்டாராவுக்கும் இடையில் அரசுத்தலைமை தொடர்பாக 2 திசம்பர் 2010 முதல் 11 ஏப்ரல் 2011 வரை சர்ச்சை இருந்து வந்தது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.