அர்பத் எலோ
அர்பத் எம்ரிக் எலோ (Arpad Emrick Elo, ஆகஸ்ட் 25, 1903 – நவம்பர் 5, 1992, இயற்பெயர்: எலோ அர்பத் இம்ரே[1][2]) அவர்கள் எலோ தரவுகோள் முறையை உருவாக்கியவர். இவர் அங்கேரியில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் குடியேறிய ஓர் இயற்பியல் பேராசிரியர் ஆவார்.
அர்பத் எலோ | |
---|---|
![]() | |
பிறப்பு | Élő Árpád Imre ஆகத்து 25, 1903 அங்கேரி |
இறப்பு | நவம்பர் 5, 1992 89) விஸ்கொன்சின் | (அகவை
தேசியம் | அங்கேரிய அமெரிக்கன் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | மார்க்கெட் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | சிக்காகோ பல்கலைக்கழகம் |
சதுரங்க விளையாட்டு வீரர்
எலோ மில்வோக்கி நகரத்தின் மார்க்வெட் பல்கலைகழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணி புரிந்தார், பல்கலைக்கழகத்தில் இவர் ஒரு சதுரங்க விளையாட்டு வீரரும் ஆவார். மில்வோக்கி நகரத்தின் சிறந்த சதுரங்க விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.
எலோ தரவுகோள் முறை
முதன்மைக் கட்டுரை:எலோ தரவுகோள் முறை
எலோ தரவுகோள் முறை (Elo rating system) சதுரங்கம் போன்ற போட்டியாளர்-எதிர்-போட்டியாளர் பங்கேற்கும் விளையாட்டுக்களில் விளையாட்டாளர்களின் ஒப்பு நோக்கத்தக்க திறன் நிலைகளை கணக்கிடுவதற்கான முறையாகும். இந்த முறையை உருவாக்கிய அர்பத் எலோ பெயரிலேயே இது குறிப்பிடப்படுகிறது.