அருணாசல புராணம்
அருணாசல புராணம் என்னும் நூல் எல்லப்ப நாவலர் என்பவரால் பாடப்பட்டது.
- இந்த நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு.
- சோழநாட்டுச் சைவ வேளாளர் இல்லங்களில் பெரிதும் போற்றப்படும் நூல்கள்
- அருணாசல புராணம்
- பெரிய புராணம்
- திருவிளையாடல் புராணம்
- பிரமோத்தர காண்டம்
‘அண்ணல் மலை’யாகிய திருவண்ணாமலையை அருணன் அசலம் எனக் கொண்டு பிற்காலத்தில் வடமொழியாளர் பெயர் சூட்டினர்.
அண்ணாமலை அண்ணலாகிய சிவபெருமானின் புகழைப் போற்றுவது இந்த நூல்.
இது இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது.
- முதல் பாகத்தை வடமொழிச் சிவபுராணத்திலுள்ள ‘ருத்திர சங்கிதை’யிலிருந்தும்,
- இரண்டாம் பாகத்தை ‘லிங்க புராண’த்திலிருந்தும் கருத்துக்களை எடுத்துககொண்டு பாடியதாகப் புலவரே தம்பாடலில் குறிப்பிடுகிறார்.
பாயிரம் நீங்கலாக ஒவ்வொன்றிலும் ஆறு சருக்கங்கள் உள்ளன.
451 பாடல்கள்
|
137 பாடல்கள்
|
- இதே நூற்றாண்டில் இதே அண்ணாமலையைப் பற்றி அருணகிரிப் புராணம் என்னும் நூல் மறைஞான சம்பந்தர் என்பவரால் இயற்றப்பட்டுள்ளது.
நூலோடு செருகல்
- வீராணப் புலவர் எயுதிய வல்லாள மகாராசன் கதை என்னும் பகுதி வல்லாள மகாராசன் சருக்கம் என்னும் பெயரில் இந்த நாலில் 1800ஆம் ஆண்டு இடையிலே செருகப்பட்டுள்ளது.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
அடிக்குறிப்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.