அரியலூர் இரயில் விபத்து

அரியலூர் இரயில் விபத்து என்பது மொத்த இந்திய நாட்டு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு புகைவண்டி விபத்தாகும்.

காலம்

1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி சென்னையிலிருந்து 13 பெட்டிகளுடன் தூத்துக்குடி ரயில் அதன் பயணத்தைத் துவக்கியது. விருத்தாச்சலம் சந்திப்பில், சேலம் செல்லும் பெட்டி ஒன்றைத் தவிர்த்து 12 பெட்டிகளுடன் பயணத்தை தொடங்கியது.[1] அப்போது கடும் மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் அரியலூர் - கல்லகம் இரயில் நிலையங்களுக்கிடையே நடந்த விபத்து ஆகும்.[2]

விபத்து

அரியலூர் அருகில் உள்ள மருதையாற்றில் மழை வெள்ளம் காரணமாக இரு கரைகளும் தெரியாதபடி தண்ணீர் சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாலை 5.30 மணி என்பதால் தண்ணீரின் அளவுபற்றி நீராவி எஞ்சின் ஓட்டுநருக்கு அறிவிப்பு இல்லை. ஆகையால் இந்த விபத்து நடந்தது.

உயிரிழப்பு

இந்த விபத்தின் காரணமாக இரயில் எஞ்சினுடன் இணைக்கப்பட்டிருந்த பல பெட்டிகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் 142 பயணிகள் மரணமடைந்தனர். 110 பயணிகள் காயமடைந்தனர் மற்றும் 200 பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.[3]

பதவி விலகல்

இந்த விபத்தின் காரணமாக அப்போதைய இரயில்வே மந்திரியாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை விட்டு விலகினார்.[4]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.