அரவிந்தர் ஆசிரமம்

அரவிந்தர் ஆசிரமம் (Aurobindo Ashram) இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் வடோதரா நகரத்தில் உள்ள தாண்டியா பசாரில் அமைந்துள்ளது. இதுவே தெற்குப் பகுதியில் பிரபலமாக இருந்த முதலாவது ஆசிரமமாகும்.

சிறீ அரவிந்தரின் நினைவுச் சின்னம் இங்கே அமைந்துள்ளது. அனைவரும் தியானம் செய்வதற்காக இவ்வாசிரமம் திறந்தே உள்ளது. இங்கு ஒரு நூலகம்,படிப்பு அறை மற்றும் விற்பனை மையம் முதலியவை உள்ளன. இங்கே அரவிந்தரும் அன்னையும் எழுதிய நூல்கள் அனைத்தும் விற்பனைக்குக் கிடைக்கும்.

வரலாறு

1894-1906 காலத்தில் சிறீ அரவிந்தர் பரோடாவில் தங்கியிருந்த சமயத்தில் இப்பங்களாவில் குடியிருந்தார். அப்போது ஆங்கிலப் பேராசிரியராகவும், தற்பொழுது மகாராசா சாயாசிராவ் பல்கலைக்கழகமாக உள்ள பரோடா கல்லூரியின் துணை முதல்வராகவும் இருந்த பரோடாவின் மகாராசா மூன்றாம் எச்.எச். சாயாசி இராவ் கெயிக்வாட்டின் தனிச் செயலராக அரவிந்தர் இருந்தார். பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், சகோதரி நிவேதிதை, சகாரம் கணேசு தியுவேசுகர் மற்றும் சில மராத்தி யோகிகள் முதலியவர்கள் இப்பங்களாவை பார்வையிட்டுள்ளனர். அரவிந்தரின் மனைவி மிர்ணாளி தேவி, சகோதரி சரோசினி தேவி மற்றும் இளைய சகோதரரும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரருமான பாரிந்தர் குமார் கோசு முதலியவர்கள் அடிக்கடி இங்கு வந்து செல்வார்கள். இப்பங்களாவில் 23 பெரிய மற்றும் சிறிய அறைகளும், 55000 சதுர அடிகளில் திறந்தவெளியும் இப்பங்களாவைச் சூழ்ந்துள்ளன[1].

மேற்கோள்கள்

மேலும் படிக்க

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.