அரவிந்தன் (இயக்குனர்)

அரவிந்தன், மலையாளத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது முழுப்பெயர் கோவிந்தன் அரவிந்தன் (கோ. அரவிந்தன்) என்பதாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் 1935 சனுவரி 21 ல் கோட்டயத்தில் பிறந்தார். மலையாள எழுத்தாளரான எம். என். கோவிந்தன் நாயர் இவரது தந்தை. திரைப்பட இயக்குனராகும் முன், மாத்ருபூமி இதழில் ‘செறிய மனுஷ்யரும் வலிய லோகவும்’ என்னும் சித்திரக்கதை எழுதியிருந்தார். 1960களின் ஆரம்பத்தில் வெளியான இந்தக் கதையில் ராமு, குருஜி என்ற கதாப்பாத்திரங்களைக் கொண்டிருந்தது.

திரைத்துறை

சிதம்பரம், வாஸ்துஹாரா உட்பட திரைப்படங்கள், சி. வி. ராமனின் சிறுகதைகளை முதன்மைப்படுத்தி வெளிவந்தன.

விருதுகள்

இவர், சிறந்த இயக்குனருக்கான அரசின் விருதினை, 1974, 1978, 1979, 1981, 1985, 1986, 1990 ஆகிய ஆண்டுகளில் பெற்றார். சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதினை 1977, 1978, 1986 ஆகிய ஆண்டுகளில் பெற்றார்.

அரவிந்தன் 1991 மார்ச்சு 15 ஆம் நாள் அன்று இறந்தார்.

இயக்கிய திரைப்படங்கள்

  • உத்தராயனம் (1974)
  • காஞ்சன சீதை (1977)
  • தம்பு (1978)
  • கும்மாட்டி (1979)
  • எஸ்தப்பான் (1980)
  • போக்குவெயில் (1981)
  • விதி (1985)
  • த சீர் ஹூ வாக்ஸ் அலோன் (1985)
  • சிதம்பரம் (1985)
  • த பிரௌன் லான்ட்ஸ்கேப் (1985)
  • ஒரிடத்து (1986)
  • காண்டூர்ஸ் ஆப் லீனியா‍ர் ரிதம் (1987)
  • மாறாட்டம் (1988)
  • அனாதி தாரா (1988)
  • உண்ணி (1989)
  • சகஜ (1990)
  • வாஸ்துஹாரா (1991)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.