அரசு நில குத்தகை

நில குத்தகை (Land Lease), தனியாருக்கு சொந்தமில்லாத தமிழ்நாடு அரசு வசமுள்ள நிலங்கள், தமிழ்நாடு அரசு விலைக்கு வாங்கிய நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றை, தற்காலிக பயன்பாட்டிற்கு குறிப்பிட்ட கால வரையரைக்குட்பட்டு, குறிப்பிட்ட நோக்கத்திற்காக நீண்டகால அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது தனியாருக்கு வருவாய் துறையால் வழங்கப்படுவதே குத்தகை எனப்படும். [1] குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலங்களுக்காக தமிழ்நாடு அரசின் வருவாய் துறை குறிப்பிட்ட தொகை வசூலிக்கும். இதில் உப்பளம் மற்றும் மீன் வள குத்தகையும் அடங்கும்.

இக்குத்தகை நிலங்கள் வேளாண்மை அல்லது வேளாண்மை அல்லாத பிற பயன்பாட்டுக்கென இருவகையாக பிரித்து நிலம் குத்தகையில் வழங்கப்படுகிறது.

குத்தகைத் தொகை நிர்ணயம் செய்தல்

ஆண்டுதோறும் நில மதிப்பு கூடி வருவதால் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகை தொகையை அன்றைய நடப்பு சந்தை மதிப்புக்கேற்ப நிர்ணயம் செய்யப்படும்.

குத்தகை தொகை நிர்ணயம் செய்திட வணிகமற்ற நோக்கத்திற்கு நில மதிப்பில் 1 சதவிகிதமும், குத்தகை கோரும் நிலம் வணிக நோக்கில் இருந்தால் நில மதிப்பில் 2 சதவிகிதமும் குத்தகை தொகையாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

எந்த காரணத்திற்காக குத்தகைக்கு வழங்கப்பட்டதோ அது முறைப்படுத்தப்படாமல் விதி மீறல் ஏதேனும் இருக்குமானால் அவ்வினங்களை கண்டறிந்து அவற்றை மீளப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உப்பள குத்தகை

அரசு உப்பள நிலங்கள், உப்பு தயாரிக்கும் பொருட்டு 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்படுகின்றன. இதில் பெருமளவிலான நிலங்கள் அரசு நிறுவனமான தமிழ்நாடு உப்பு கழகம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியாருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். தனி நபருக்கு 6 ஹெக்டேர் நிலமும் கூட்டுறவு சங்கங்களுக்கு 40 ஹெக்டேர் நிலமும் வழங்கப்படும்.

மீன்வளக் குத்தகை

இறால் / மீன் வளர்ப்புக்கு தனியார் நிறுவனங்களுக்கு உவர் நீர் பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் குத்தகையில் வழங்கப்பட்டு வருகின்றன. இறால் வளர்ப்புக்காக நிலங்களை குத்தகைக்கு விடுவதற்கு மாவட்ட ஆட்சியர், நில நிர்வாக ஆணையர் மூலம் அரசுக்கு வருவாய் துறை அறிக்கை அனுப்ப வேண்டும்.

மேற்கோள்கள்

  1. நில குத்தகை (LAND LEASE)

வெளி இணைப்புகள்

[[பகுப்பு:வருவாய்த் துறை|*]

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.