அம்மைநோய் வகைகள்
அம்மைநோய் என்பது முதுவேனில்காலம் அல்லது வெய்யில் காலத்தில் கடும் வெப்பத்தால் மக்களைத் தாக்கும் கொப்புள நோய் ஆகும். பெண் தெய்வமாகிய காளியம்மையால் இந்நோய் உண்டானது என்று நம்பிய காரணத்தால் அதற்கு அம்மை நோய் என்று தமிழர்கள் பெயரிட்டார்கள் பிற்காலத்தில் கொற்றவை என்னும் போர் வெற்றித் தெய்வத்தையும் அம்மைநோய் வராமல் தடுப்பதற்கு வணங்கினார்கள்.
அம்மைநோய் வகைகள்
- சின்னம்மை
- பெரியம்மை
- விளையாட்டம்மை
- தட்டம்மை
- பாலம்மை
- தவளையம்மை
- கல்லம்மை
- மிளகம்மை
- கடுகம்மை
- பாசிப்பயரற்றம்மை
- வெந்தயம்மை
- கொள்ளம்மை
- பனியேறி, ஒரு குரு அம்மை
- பனைமுகரி, ஒரு கருப்புக் குரு அம்மை
- கரும்பனசை
- பயறி
- இராமக்கம்
- விச்சிலுப்பை அல்லது விச்சிலிர்ப்பான்; சிச்சிலுப்பான், சிச்சிலிர்ப்பான்
- நீர்க்கொள்வான்
- கொப்புளிப்பான்
விலங்கின அம்மைநோய்
- மாட்டம்மை
- ஆட்டம்மை
- பன்றியம்மை
- குதிரையம்மை
- ஒட்டக அம்மை
மேற்கோள்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி --முதன் மடலம்-முதற்பகுதி, தொகுத்தவர் ஞா.தேவநேயப் பாவாணர். வெளியீடு தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் சென்னை. சனவரி 1985. பக்க எண் 263
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.