அம்மணி

அக்டோபர் 14,2016ல் வெண் கோவிந்தா தயாரிப்பில் வெளிவந்த அம்மணி என்கிற திரைப்படத்தை நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார்[1]. இப்படத்தில் நடிகைகள் லஷ்மி ராமகிருஷ்ணன், சுப்புலஷ்மி மற்றும் நடிகர் நிதின் சத்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் கிருஷ்ண குமார் இசையமைத்துள்ளார்.

அம்மணி
இயக்கம்லஷ்மி ராமகிருஷ்ணன்
தயாரிப்புவெண் கோவிந்தா
கதைலஷ்மி ராமகிருஷ்ணன்
திரைக்கதைலஷ்மி ராமகிருஷ்ணன்
இசைகிருஷ்ண குமார்
நடிப்புலஷ்மி ராமகிருஷ்ணன்
சுப்புலஷ்மி
நிதின் சத்யா
ஒளிப்பதிவுகே. ஆர். இம்ரான் அகமது
படத்தொகுப்புகே. ஆர். ரெஜித்
வெளியீடுஅக்டோபர் 14, 2016
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

  • லஷ்மி ராமகிருஷ்ணன் - சாலம்மா
  • சுப்புலஷ்மி - அம்மணி
  • நிதின் சத்யா - முத்து
  • ஜார்ஜ் மரியான் - சிவா
  • ஸ்ரீ மகேஷ் - செல்வம்
  • ரெஜின் ரோஸ்
  • செம்மலர் அண்ணம்
  • ரேணுகா
  • தங்கம் பரமநந்தன்
  • மானஸ்
  • ரோபோ சங்கர்

தயாரிப்பு

இயக்குனரும் நடிகையுமான லஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு தனியார் நிகழ்ச்சியில் வந்த ஒரு பெண்ணை சந்தித்த இவர் அப்பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை மையமாக்கி ஒரு திரைப்படமாக இயக்கினார். இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் பழம்பெரும் நடிகை சுப்புலஷ்மி லஷ்மி ராமகிருஷ்ணனுடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர்கள் ரோபோ சங்கரும் நிதின் சத்யாவும் இப்படத்தில் இணைந்தனர். 2015ஆம் ஆண்டில் இப்படபிடிப்பைத் தொடங்கினர்[2].

இப்பட தயாரிப்பு ஜூலை 2015 அன்று முடிந்த நிலையில் செப்டம்பர் 2015ல் டீசரை வெளியிட்டனர். திரைப்பட வெளியிடும் விழா குவைத்தில் நடைபெற்றது[3]. இப்படத்தின் மற்றொரு டீசரை துபாயில் வெளியிட்டனர். முதலில் 2015 தீபாவளியன்று இப்படம் திரையிட அறிவிக்கப்பட்டனர் பின்னர் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இப்படம் 2016ல் வெளியிடப்பட்டது.

ஒலிப்பதிவு

இப்படத்திற்கு பிண்ணணி இசையும் பாடல்களும் கிருஷ்ண குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்துப் பாடல்களை பாடலாசிரியர் நா.முத்துகுமார் இயற்றியுள்ளார். இப்படத்தின் நான்கு பாடல்களைக் கொண்ட நிலையில் அக்டோபர் 7, 2016ல் பாடல்களை வெளியிடப்பட்டது.

சிஃபி.காம் "இப்பட பாடல்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கிறது" என்று பாராட்டியது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா "கே நன்கு முயற்சி எடுத்து இசையமைத்துள்ளார்[4]" எனவும் பாராட்டியது.

வரவேற்பு

இப்படம் மகிழ்ச்சியான வரவேற்பை ஏற்படுத்தியது. சிஃபி.காம் "இப்படம்சமுதாயத்திற்கு நன்கு கருத்துரைத்தது" எனவும் "இப்படத்தில் லஷ்மி ராமகிருஷ்ணன் நன்றாக இயக்கி முக்கிய கதாப்பாத்திரத்தில் மிகவும் நன்றாக நடித்துள்ளார்" எனவும் பாராட்டியது[5].

சான்றுகள்

  1. "when-lakshmy-was-in-awe-of-subbalakshmis-enthusiasm-news".
  2. "I don't like being called paati: Subbulakshmi".
  3. "Ammani heads to Kuwait, Dubai".
  4. "Music Review: Ammani".
  5. "Ammani review- Honest attempt".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.