அமைப்பு வட்டக் கருவி

அமைப்பு வட்டக் கருவி (Setting circles) தொலைநோக்கிகளை நிலநடுக் கோட்டுக்கு இணையாக அமைக்க உதவுகிறது. கோளியல் மற்றும் நட்சத்திர வரைபடம் ஆகியவற்றைக் காணும் வகையில் தொலைநோக்கியை அமைக்க, இவ்வகை கருவி பயன்படுகிறது.

அமைப்பு வட்டக் கருவியை நிலநடுக் கோட்டுக்கு இணையாக அமைத்திருக்கும் தொலைநோக்கியின் படம்

விளக்கம்

நிலநடுக் கோட்டுக்கு இணையாக உள்ள அமைப்பு வட்டக் கருவியில் இரண்டு அளவுகோடிட்ட வட்டத்தட்டுகள் உள்ளன. அதில் ஒன்று வல எழுச்சிக் கோணம் (right ascension) அளக்கவும், மற்றொன்று சரிவுக் கோணம் (declination) அளக்கவும் பயன்படுகிறது. வல எழுச்சிக் கோணம் மணி, நிமிடம், நொடி என அளவுகோடிடப்பட்டுள்ளது. சரிவுக் கோணம் மணி, நிமிடம், நொடி என அளவுகோடிடப்பட்டுள்ளது. வல எழுச்சிக் கோண அச்சு வான் கோளத்திற்கு இணையாக அமைக்கப்படுகிறது. வல எழுச்சிக் கோணம், பொதுவாக விண்மீன் வழி நேரத்துடன் இணைக்கப்படுகிறது. நிலநேர்க்கோடு மற்றும் நிலநிரைக்கோடு கொண்டு பூமியில் இடங்களைக் கண்டறிவது போல், அமைப்பு வட்டக் கருவி வான் கோளத்தில் பொருட்களை கண்டறியப் பயன்படுகிறது. வட அரைக்கோளம், தென் அரைக்கோளம் ஆகிய இரண்டையும் அளக்க தனித்தனி அளவுகள் கொண்ட அமைப்பு உள்ளது.

பயன்கள்

ஆராயும் தொலைநோக்கிகள்

அமைப்பு வட்டக் கருவி உருவாக்குவதில் ஆரம்பத்தில் மிகுந்த சிரமம் இருந்தது. பிரிக்கும் இயந்திரத்தில் ஒரு இணை அமைப்பு வட்டக் கருவிகளை மிகுந்த துல்லியத்துடன் உருவாக்கப்பட்டது. அதிக விட்டத்துடன் கூடிய அமைப்பு வட்டக் கருவி உருவாக்கப்பட்டு வெர்னியர் அளவுகள் கொண்ட தொலைநோக்கிகள் கோணத்துளி (1/60 பாகை) துல்லியத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. 20ஆம் நூற்றாண்டில் அமைப்பு வட்டக் கருவிக்குப் பதிலாக மின்னணு பரிபாடை புகுத்தி (encoders) எனும் கருவி பெரும்பாலன ஆராயும் தொலைநோக்கிகளில் பயன்படுத்தப்படுகிறது.

எங்கும் எடுத்துச் செல்ல வல்ல தொலைநோக்கிகள்

தொழில்முறை அல்லாத வானியலில் (amateur astronomy) பயன்படுத்தப்படும் எங்கும் எடுத்துச் செல்ல வல்ல தொலைநோக்கிகளில் அமைப்பு வட்டக் கருவி பயன்படுத்தப்படுகிறது. அமைப்பு வட்டக் கருவிகளை உருவாக்கத் தேவையானவை:

  • துருவங்களை நோக்கி ஒருங்கிணைத்தல் - தொலைநோக்கியை வான்கோளத்தின் வடதுருவம் அல்லது தென்துருவம் நோக்கி ஒருங்கிணைத்தல். துருவ விண்மீன் (Polaris) வடதுருவத்திலும், சிக்மா ஆக்டென்டிசு விண்மீன் (Sigma Octantis) தென்துருவத்திலும் உள்ளது.
  • வல எழுச்சிக் கோணத்தை அமைத்தல் - துருவங்களை நோக்கி ஒருங்கிணைத்த பின், நோக்குநர் கணிப்பானின் உதவியுடன், விண்மீன் நேரத்துடன் (Sidereal Time) ஒருங்கிணைக்கப்பட்டு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் இடத்தை கண்டறிய உதவுகிறது.

தொலைநோக்கியை மிகச் சரியாக அமைக்க இயலாததற்கு சில காரணங்கள்:

  1. துருவங்களை நோக்கி ஒருங்கிணைத்தல் என்பது துல்லியமாக அமைவதில்லை.
  2. ஒளிக் குழாயும் (optical tube) சரிவு அச்சும் (declination axis) ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவதில்லை.
  3. வல எழுச்சிக் கோணமும் சரிவு அச்சும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவதில்லை.
  4. அமைப்பு வட்டக் கருவியை சுழற்றும் போது தவறுகள் ஏற்படுகிறது.
  5. அமைப்பு வட்டக் கருவியில் அளக்கும் போது தவறுகள் ஏற்படுகிறது
  6. வட மற்றும் தென் நேரக்கோணத்தை (hour angles) (வல எழுச்சிக் கோணம்) கண்டறிவதில் குழப்பமுள்ளது.

துருவ விண்மீனை அடிப்படையாகக் கொண்டே தொலைநோக்கிகள் நிலைநிறுத்தப்படுகின்றன. ஆனால் துருவ விண்மீன் வட துருவத்திலிருந்து அரை டிகிரி பாகை விலகி உள்ளது. இதனால் அளவுகள் துல்லியமாக அமைவதில்லை.

எண்மின் அமைப்பு வட்டக் கருவி

எண்மின் அமைப்பு வட்டக் கருவி (Digital setting circles (DSC)) என்ற அமைப்பில், இரு சுழலும் பரிபாடை புகுத்திகள் (rotary encoder) தொலைநோக்கியின் இரு அச்சிலும் எண்ணிம காட்சிப்பலகையில் நேரடியாக அளவுகள் தெரியும் படி வடிவமைக்கப்படும். இவ்வகை காட்சிப்பலகைகளில் இருளில் கூட அளவிட முடியும். தொலைநோக்கியுடன் இணைக்கப்பட்டுள்ள நுண்கணிப்பொறிகள் (microcomputer) வான் கோளத்தில் வான் பொருட்களின் இடங்களை துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.