அமெரிகோ வெஸ்புச்சி

அமெரிகோ வெஸ்புச்சி (Amerigo Vespucci) ஒரு இத்தாலியக் கடலோடி ஆவார். இவரே கொலம்பசுக்குப் பின்னர் அமெரிக்கக் கண்டத்துக்குச் சென்றவர். இவரது பெயரில் இருந்தே "அமெரிக்கா" என்ற பதம் உருவானது. இவர் 1454 ஆம் ஆண்டு இத்தாலியின் புளோரன்சில் பிறந்தார்.

அமெரிகோ வெஸ்புச்சி
பிறப்புமார்ச்சு 9, 1454(1454-03-09)
புளோரன்சு, புளோரன்சு குடியரசு, இன்றைய இத்தாலியில்
இறப்புபெப்ரவரி 22, 1512(1512-02-22) (அகவை 57)
செவில், எசுப்பானியா
தேசியம்இத்தாலியர்
பணிவணிகர், நடுகாண் பயணி, நிலப்படவரைஞர்
அறியப்படுவதுபுதிய உலகம் ஆசியா அல்ல என்பதையும், அது முன்னர் அறிமுகமில்லாத நான்காவது கண்டம் என்பதையும் காட்டினார்.[a]
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.