அமீரக மக்கள்

அமீரக மக்கள் என்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமக்களும், அந்நாட்டைச் சேர்ந்த இனக்குழுவினரும் ஆவர். அபுதாபி, துபாய் ஆகிய அமீரகங்களின் ஆளும் வம்சத்தினர் உட்படப் பல அமீரக மக்கள், பனி யாஸ் என்னும் குலத்தைச் சேர்ந்தவர்கள். ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேராத சில இனக்குழுவினரும் படிப்படியாக அமீரகச் சமூகத்தில் இரண்டறக் கலந்துவிட்டனர். பாக்கிசுத்தானைச் சேர்ந்த பலூச்சிகள், ஈரானின் பசுத்தாக் பகுதியைச் சேர்ந்தவர்கள், பகரேனியர்கள் போன்றோர் இவ்வாறு அமீரகர்கள் ஆனோரில் அடங்குவர். மிகக் குறைந்த அளவில் தென்னாசியர்களும், ஆபிரிக்க மக்களும் அமீரகச் சமூகத்தில் கலப்புத் திருமணம் செய்துகொண்டு அமீரகர் அல்லாத ஐக்கிய அரபு அமீரகக் குடிமக்களாக ஆகியுள்ளனர்.

அமீரகர்
إماراتي
மொத்த மக்கள்தொகை
(அமீரகர்
990,000 மக்கள்
2009 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள்தொகையின் 16.5%[1])
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 ஐக்கிய அரபு அமீரகம்990,000[1]
மொழி(கள்)
வளைகுடா அரபு மொழி · பொது அரபு மொழி
சமயங்கள்
இசுலாம்

இனக்குழுக்கள்

பனி யாஸ் குலம் பல துணைக் குலங்களுக்கு அடிப்படையாக அமைகின்றது. பின்வருவன பனி யாசின் துணைக் குலங்களுள் அடங்கும்:

அமீரகர் எண்ணிக்கை

2009 ஆம் ஆண்டு மதிப்பீடுகளின்படி ஐக்கிய அமீரகத்தின் மக்கள் தொகை ஆறு மில்லியன் (60 இலட்சம்) ஆகும். இதில் தாயக அமீரகர்கள் 16.5% ஆகும். எஞ்சியவர்களில் பலர் இந்தியர் (1.75 மில்லியன்), பாக்கிசுத்தானியர் (1.25 மில்லியன்), வங்காளதேசத்தவர் (500,000) போன்ற தென்னாசியாவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர்.

சமயம்

ஏறத்தாழ அமீரகர்கள் அனைவருமே இசுலாம் மதத்தினர். இவர்களில் 85% மக்கள் சுணி பிரிவைச் சேர்ந்தவர்கள் மிகுதி 15 வீதத்தினர் சியா பிரிவினர்.

குறிப்புக்கள்

  1. UAE population touches 6 million. UAEInteract.com. 07/10/2009
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.