அமில நீரிலி

அமில நீரிலி என்பது ஒரே ஒட்சிசன் அணுவுக்கு இணைக்கப்பட்ட இரு ஏசைல் கூட்டங்களைக் கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும்.[1] பொதுவாக, ஏசைல் கூட்டங்கள் ஒரே காபொட்சிலிக் அமிலத்திலிருந்தே பெறப்படும். இதன் பொதுச் சூத்திரம் (RC(O))2O ஆகும். இவ்வாறான சமச்சீரான அமில நீரிலிகளின் பெயரீடு, உரிய காபொட்சிலிக் அமிலப் பெயரின் acid எனும் சொல்லை anhydride எனும் சொல்லினால் பிரதியிடுவதன் மூலம் குறிப்பிடப்படும்.[2] உதாரணமாக, (CH3CO)2O என்பது acetic anhydride (அசெற்றிக் நீரிலி) எனப் பெயரிடப்படும். சமச்சீரற்ற அமில நீரிலிகளும் அறியப்பட்டுள்ளன. உதாரணமாக acetic formic anhydride (அசெற்றிக் ஃபோமிக் நீரிலி)யைக் குறிப்பிடலாம்.

அமில நீரிலிக்கான பொதுவான உதாரணம்.

முக்கிய அமில நீரிலிகள்

அசெற்றிக் நீரிலி என்பது முக்கியமான கைத்தொழில் ரசாயனப் பொருளாகும். இது அசற்றேற்று எஸ்டர் (உ-ம்:செலுலோசு அசற்றேற்று) தயாரிப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "acid anhydrides". Compendium of Chemical Terminology Internet edition.
  2. வார்ப்புரு:BlueBookRef
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.