அமிதாப் கான்ட்

அமிதாப் கான்ட் என்பவர் நிதி ஆயோக் எனப்படும் இந்தியத் திட்டக் குழுவின் முதன்மைச் செயல் அதிகாரி ஆவார். இப்பதவிக்கு முன் தொழிற் கொள்கை மற்றும் பரப்பல் துறையில் செயலராக இருந்தார்.[1]

அமிதாப் கான்ட்
அமிதாப் கான்ட் (2017)
பிறப்பு1 மார்ச் 1956 (age 63)
படித்த இடங்கள்

படிப்பு

தில்லியில் மாடர்ன் பள்ளியிலும், தில்லி ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலையம் பின்னர் சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முதுகலையும் படித்தார். அமிதாப் கான்ட் இந்திய ஆட்சிப் பணியாளராகத் தகுதி பெற்று 1980 இல் கேரள மாநில ஆட்சிப் பணியில் அமர்த்தப்பட்டார். செவனிங் ஸ்காலர்சிப் என்ற பயிற்சியும் இவர் பெற்றார்.

அரசுப் பணிகள்

கேரளத்தில் சுற்றுலாத் துறையிலும், தொழில் துறையிலும் பணி புரிந்தார். கோழிக்கோடு மாவட்ட ஆட்சித் தலைவராகவும் இருந்தார். கோழிக்கோடு வானூர்தி நிலையம் நிர்மாணிப்பதிலும், பிஎஸ்ஈஎஸ்  மின்சாரத் திட்டம், மட்டஞ்சேரி பாலம் அமைப்பதிலும் ஈடுபட்டார். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற இந்திய நடுபவணரசின் செயற்பாடுகளில் இயங்கினார்.[2]

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.