அமிதவ் கோசு

அமிதவ் கோசு (Amitav Ghosh சூலை 11, 1956[1] ) கல்கத்தாவில் பிறந்த இந்திய நாட்டு ஆங்கில எழுத்தாளர் ஆவார். இவர் ஆங்கிலத்தில் புதினங்களும் நூல்களும் எழுதியுள்ளார். 20 மொழிகளுக்கு மேல் இவருடைய படைப்புகள் மொழியாக்கம் செய்யப் பெற்றுள்ளன. நியூயார்கர், நியூயார்க்கு டைம்சு, நியூ ரிபப்ளிக் போன்ற மேல்நாட்டுப் பத்திரிக்கைகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அமிதவ் கோசு நியூயார்க்கில் மனைவி மக்களுடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய மனைவி தெபோரா பேக்கரும் ஒரு நூலாசிரியர் ஆவார்.

அமிதவ் கோசு

தொழில் எழுத்தாளர்
நாடு இந்தியர்
அமெரிக்கர்
கல்வி நிலையம் தி டூன் பள்ளி
புனித ஸ்டீபன் கல்லூரி, தில்லி, தில்லி பல்கலைக்கழகம்
புனித எட்மண்டு ஹால், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
இலக்கிய வகை வரலாற்றுப் புனைவு
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
The Glass Palace
Sea of Poppies
River of Smoke
துணைவர்(கள்) தெபோரா பேக்க

பிறப்பும் படிப்பும்

அமிதவ் கோசின் தந்தை இந்தியப் படைத் துறையில் பணிசெய்து வந்தார். எனவே அமிதவ் கோசு இந்தியா, வங்க தேசம், சிறீலங்கா ஆகிய நாடுகளில் வளர்ந்தார். டூன் பள்ளியிலும் தில்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியிலும் தில்லி பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்றார்.

பணிகள்

அம்தவ் கோசு முதன் முதலாக இந்தியன் எக்சுபிரசு பத்திரிக்கையில் சேர்ந்து பணி புரிந்தார். பின்னர் இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களிலும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியராகவும் கல்வியாளராகவும் பணி புரிந்தார்.

பட்டங்களும் விருதுகளும்

  • பத்ம சிறீ விருது (2007)
  • நியூயார்க் குயின் கல்லூரி வழங்கிய ஆய்வறிஞர் பட்டம் (2010)
  • மார்கரெட் அட்வுட் என்பவருடன் டான் டேவிட் விருது (2010)
  • மாண்டிரில் நடந்த புலூ மேட்ரோபாளிஸ் திருவிழாவில் அளிக்கப்பட்ட பன்னாட்டு கிராண்ட் பிரிக்ஸ் பட்டம் (2011)
  • 2009 ஆம் ஆண்டில் ராயல் இலக்கியக் கழகத்தில் மதிப்புமிகு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்[2].
  • 2008 இல் புக்கர் பரிசு போட்டியில் பட்டியலில் இருந்த போதிலும் மயிரிழையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது[3].

2008 இல்,இந்தியாவில் தரப்படும் கிராஸ்வேர்ட் புத்தகப் பரிசை, Sea of Poppies என்ற புதினத்திற்காகப் பெற்றார்.

  • 2016இல், இந்தியாவில் தரப்படும் கிராஸ்வேர்ட் புத்தகப் பரிசை, flood of fire என்ற புதினத்திற்காக, இரண்டாவது முறையாகப் பெற்றார்.

படைப்புகள்

புதினங்கள்

பொது நூல்கள்

  • In an Antique Land (1992)
  • Dancing in Cambodia and at Large in Burma (1998; Essays)
  • Countdown (1999)
  • The Imam and the Indian (2002; Essays)
  • Incendiary Circumstances (2006; Essays)

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.