அமராவதி விரைவுவண்டி

அமராவதி எக்ஸ்பிரஸ் இந்திய ரயில்வேக்கு உட்பட்ட தொடர்வண்டி ஆகும். இது இரு வழித் தடங்களில் இயங்குகிறது.

அம்ராவதி விரைவுவண்டி என்ற பெயரில் மற்றொரு வண்டி இயக்கப்படுகிறது.
17225/17226 அமராவதி விரைவுத் தொடருந்தின் வழித்தடம் (விஜயவாடா- ஹூப்ளி)
18047/18048 அமராவதி விரைவுத் தொடருந்தின் வழித்தடம் (ஹௌரா-வாஸ்கோ)

முதல் தடம்

  1. 17225 என்ற வண்டி எண்ணுடன் விஜயவாடா – ஹூப்ளி வழித் தடத்தில் இயங்குகிறது.
  2. 17226 என்ற வண்டி எண்ணுடன் ஹூப்ளி - விஜயவாடா வழித் தடத்தில் இயங்குகிறது.

இந்த வண்டி இரு தடங்களிலும் வாரத்திற்கு மூன்று முறை செயல்படும். இந்த வண்டியை தென்னக ரயில்வேயின் ஒரு பிரிவான விஜயவாடா ரயில்வே கோட்டம் இயக்குகிறது. இதன் ரேக்கினை 17208/17207 வண்டியுடன் பகிர்ந்துகொள்கிறது.[1]

இரண்டாவது தடம்

இந்த வண்டி ஆந்திரப் பிரதேசம் முதல் கோவா வரை பயணிக்கிறது.[2]

  1. 18047 என்ற வண்டி எண்ணுடன் ஹவுரா – வாஸ்கோடாகாமா வழித் தடத்தில் இயங்குகிறது.
  2. 18048 என்ற வண்டி எண்ணுடன் வாஸ்கோடகாமா – ஹவுரா வழித் தடத்தில் இயங்குகிறது.

இந்த வண்டி வாரத்திற்கு நான்கு முறை பயணிக்கிறது. விஜயவாடா, குண்டக்கல், ஹூப்ளி, மட்காவ் ஆகிய வழித்தடங்களின் வழியே செல்கிறது. இது தென்கிழக்கு ரயில்வேயின் ஒரு பிரிவான கரக்பூர் ரயில்வேயினால் இயக்கப்படுகிறது. பேன்ட்ரி கார் வசதிகள் இந்த ரயில்சேவையில் இல்லை. கேட்டரிங் உணவுச் சேவைகள் அளிக்கப்படுகின்றன.[3]

இடங்கள்

குண்டூர், நரசாராவுபேட்டை, கம்பம், நந்தியால், மகாநந்தி, குண்டக்கல், பெல்லாரி ஆகிய பகுதிகளைச் சுற்றிய இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பயன்படுகிறது.

பெயர் தோற்றம்

சாதவாகன வம்சத்தினரின் தலைநகரின் நினைவாக அமராவதி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அமராவதி என்னும் நகரம் குண்டூர் மாவட்டத்தில் உள்ளது. அமராவதியிலுள்ள விகாரைகளினால் ’தென்னிந்தியாவின் சாஞ்சி’ என்றழைக்கப்படுகிறது.

வழித்தட அட்டவணை

அமராவதி விரைவுவண்டியின் வழித்தட விவரங்கள் அடங்கிய அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது[4].

எண்நிலையத்தின் பெயர் (குறியீடு)வரும் நேரம்புறப்படும் நேரம்நிற்கும் நேரம்
(நிமிடங்கள்)
கடந்த தொலைவு
(கி.மீ)
நாள்பாதை
1ஹூப்ளி சந்திப்பு (UBL)தொடக்கம்12:150011
2அண்ணிகேரி (NGR)12:5412:5513611
3கதக் சந்திப்பு (GDG)13:1813:2025911
4கொப்பால் (KBL)14:0114:02111611
5முனிராபாது (MRB)14:2714:28113811
6ஹொஸ்பேட் சந்திப்பு (HPT)14:4814:50214411
7டோரானகல்லு (TNGL)15:2915:30117611
8பெல்லாரி சந்திப்பு (BAY)16:1816:20220911
9குண்டக்கல் சந்திப்பு (GTL)17:1017:251525911
10மத்திகேரா (MKR)17:3917:40127111
11பென்டேகல்லு (PDL)18:0418:05130211
12டோன் (துரோணாச்சலம்) (DHNE)18:3818:40232811
13பெடாம்செர்லா (BMH)19:1219:13136411
14பி சிமெண்ட் நகர் (BEY)19:2119:22137011
15நந்தியால் (NDL)20:2020:25540411
16கித்தலூர் (GID)21:1521:16145711
17கம்பம்(CBM)21:4421:45149111
18தருலபுடு (TLU)22:0422:05150411
19மார்கபூர் சாலை (MRK)22:1422:15151711
20டோனகோண்டா(DKD)22:4522:46154111
21குரிச்சேடு (KCD)23:0523:06155411
22வினுகொண்டா(VKN)23:2723:28157811
23நரசராவுபேட்டை (NRT)00:1000:11161621
24குண்டூர் சந்திப்பு (GNT)01:4002:002066121
25விஜயவாடா சந்திப்பு (BZA)02:5000:00127069321
26குண்டக்கல் சந்திப்பு (GTL)17:1022:1030025912
27கர்னூல் நகரம் (KRNT)00:3700:3928122
28கத்வால் (GWD)01:4201:43143722
29மஃகபூப்நகர் (MBNR)02:5002:52251222
30ஷாத்நகர் (SHNR)03:4403:45156622
31கச்சிகுடா (KCG)05:00முடிவு061722

குறிப்புகள்

  1. "Amaravati Express -17225". Indiarailinfo.com.
  2. "Amaravati Express". Hampi.in.
  3. "Howrah Junction To Vasco-Da-Gama". Indiarailinfo.com.
  4. "Amaravati Express-17226". cleartrip.com.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.