அப்பாஸ் கியரோஸ்தமி

அப்பாஸ் கியரோஸ்தமி ( Abbas Kiarostami (பாரசீக மொழி: عباس کیارستمی‎‎  pronunciation ;[1] 22 சூன் 1940 – 4 சூலை 2016) என்பவர் ஒரு ஈரானிய திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், ஒளிப்பதிவாளர், படத் தயாரிப்பாளர் ஆவார்.[2][3][4] இவர் 1970 முதல் திரைக்கலைஞராக உள்ளார், இவர் நாற்பது படக்களுக்குமேல் பணியாற்றியுள்ளார், இதில் குறும்படங்கள்,  விபரணத் திரைப்படங்கள் போன்றவையும் அடங்கும். இவர் இயக்கி விருதுகள் பெற்ற படங்கள் கோகிர் ட்ரிலோகே (1987–94), குலோசப் (1990), டேஸ் ஆப் செர்ரி (1997) , பேத் மா ரா ஹாஹத் போட் (1999). இவரின் பிற்காலப் படங்கள், செர்டிபைடு காஃபி (2010) மற்றும் லேக் சோமியோன் இன் லவ் (2012), 

சிறு வயதிலிருந்து ஓவியக் கலையில் ஈடுபாடு கொண்டிருந்த அப்பாஸ் கியரோஸ்தமி, ஓவியம், வடிவமைப்பு ஆகியவற்றையே படித்தார். படித்து முடித்த பிறகு விளம்பரத் துறைக்குள் நுழைந்தார். ஈரானியத் திரைப்படங்களில் புதிய அலை இயக்கத்தின் வித்தாக டாரீயூஷ் மெஹ்ர்ஜூயின் ‘த கவ்’ (பசு) திரைப்படம் அடைந்த வெற்றி அப்பாஸ் கியரோஸ்தமிக்குப் திரைத்துறைமீது ஆர்வத்தைத் தூண்டவே திரைத்துறையில் நுழைந்தார். துவக்கத்தில் குழந்தைகளைப் பற்றி நிறைய ஆவணப்படங்களையும் குறும்படங்களையும் இயக்கினார். அவரது முதல் முழு நீளத் திரைப்படம் வேர் இஸ் த ஃப்ரண்ட்ஸ் ஹோம்?. அப்பாஸ் கியரோஸ்தமி உலக அளவில் கண்டு கொள்ளப்பட்டது இந்தப் படத்துக்குப் பிறகுதான்.

அவரது படங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அவர் கதை சொல்வதற்கு முயலவே மாட்டார் என்பதும், ஒரு கதாபாத்திரத்தை, ஒரு வாழ்க்கையை கேமரா பின் தொடர்ந்தால் எப்படி இருக்குமோ அதுபோல இருக்கும்.[5]

மேற்கோள்கள்

  1. Persian pronunciation: [ʔæbˌbɒːse kijɒːɾostæˈmi]
  2. Panel of critics (14 November 2003). "The world's 40 best directors". London: Guardian Unlimited. https://www.theguardian.com/film/2003/nov/14/1. பார்த்த நாள்: 23 February 2007.
  3. Karen Simonian (2002). "Abbas Kiarostami Films Featured at Wexner Center" (PDF). Wexner center for the art. மூல முகவரியிலிருந்து 10 July 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 February 2007.
  4. "2002 Ranking for Film Directors". British Film Institute (2002). பார்த்த நாள் 23 February 2007.
  5. "அஞ்சலி: ஈரானிய திரைப்பட இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்தமி- வாழ்க்கையைப் பின்தொடர்ந்த கலைஞர்". தி இந்து தமிழ் (2016 சூலை 16). பார்த்த நாள் 16 சூலை 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.