அப்பாஸ் அலி

கேப்டன் அப்பாஸ் அலி நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர். கேப்டன் அப்பாஸ் அலி பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கும், ஆங்கிலேய ராணுவத்திற்கும் எதிராக கலகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்து 1945ல் மரண தணடனை வழங்கியது. பின்னர் 1947ல் இந்திய விடுதலைக்கு பிறகு இந்திய அரசால் விடுதலை செய்யப்பட்டார்.

அப்பாஸ் அலி
{{{lived}}}
பிறப்பு சனவரி 3, 1920(1920-01-03)
இறப்பு 11 அக்டோபர் 2014(2014-10-11) (அகவை 94)
சார்பு ஆசாத் இந்த்
பிரிவு இந்தியத் தேசிய இராணுவம்
சேவை ஆண்டு(கள்) 1939–1947
தரம் கேப்டன்

இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை எதிர்த்து லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணனுடன் தேச நலனுக்காக மீண்டும் போராடிக் கைது செய்யப்பட்டு, 1977ல் விடுதலை செய்யப்பட்டார். கேப்டன் அப்பாஸ் அலி 11-10-2014 ல் அலிகாரில் 94வது வயதில் காலமானார்.[1].[2].

மேற்கோள்கள்

  1. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர் மறைவு
  2. http://articles.economictimes.indiatimes.com/2014-10-11/news/54899722_1_aligarh-muslim-university-freedom-fighter-captain-abbas-ali
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.