அப்பச்சன்

அப்பச்சன் (1925 – ஏப்ரல் 23, 2012), இந்தியத் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் தொழில் முனைவோரும் ஆவார். மலையாளத் திரைப்படத் துறையில் இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.

வாழ்க்கைக் குறிப்பு

மாளியம்புரக்கல் சாக்கோ புன்னூஸ் என்பது இவரது இயற்பெயர். ஆலப்புழா மாவட்டத்தில் பிறந்தவர். ஜிஜோ, ஜோஸ் ஆகிய மகன்கள் உள்ளனர். இவர் 1924 பிப்ரவரி 6-ல், ஆலப்புழை மாவட்டத்தில் புளிங்குன்று என்ற இடத்தில் பிறந்தார். ஏப்ரல் 23, 2012 இல் தனது 87 ஆவது வயதில் கொச்சியில் மரணமடைந்தார்.[1]

திரைத்துறை

உதயா, நவோதயா உள்ளிட்ட நிறுவனங்களின் மூலம் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வெளியான முதல் 3 டி திரைப்படமான மை டியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படத்தை தயாரித்தவர். இது 1984இல் பிரதமரின் தங்க விருதினைப் பெற்றது. தூர்தர்ஷனில் வெளியான பைபிள் கதைத்தொடர் இயக்கியவரும் இவரே. திரைத்துறையைச் சார்ந்த அமைப்புகளில் பதவி வகித்துள்ளார்.

இயக்கியவை

  • 1978 - தச்சோளி அம்பு
  • 1978 - கடத்தநாட்டு மாக்கம்
  • 1979 - மாமாங்கம்
  • 1980 - தீக்கடல்
  • 1980 - மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள்
  • 1982 - படயோட்டம்
  • 1984 - மை டியர் குட்டிச்சாத்தான்
  • 1986 - ஒன்னு முதல் பூஜ்யம் வரெ
  • 1989 - சாணக்கியன்
  • 1998 - சோட்டா சேதன்
  • 2003 - மாஜிக் மாஜிக்

தயாரித்தவை

  • 1978 - தச்சோளி அம்பு
  • 1978 - கடத்தநாட்டு மாக்கம்
  • 1979 - மாமாங்கம்
  • 1980 - தீக்கடல்

விருதுகள்

  • ஜே.சி. டேனியல் விருது (2011)[2]

பிற

இந்தியாவின் முதல் கருத்துப் பூங்காவான ’கிஷ்கிந்தா’வைச் சென்னைக்கருகே உருவாக்கினார்.

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.