அப்துல் பத்தா அல்-சிசி

அப்துல் ஃபத்தா சயீது காலில் அல்-சிசி (Abdel Fattah Saeed Hussein Khalil El-Sisi, அரபு மொழி: عبد الفتاح سعيد حسين خليل السيسي ; பிறப்பு: 19 நவம்பர் 1954) எகிப்திய அரசுத்தலைவர். எகிப்திய படைத்துறைக் கட்டளைத் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் 12 ஆகத்து 2012 முதல் 26 மார்ச் 2014 வரை பணியாற்றினார்.[3] படைத்துறைத் தலைவராக இவர் பணியாற்றிய போது முன்னாள் இசுலாமிய அரசுத்தலைவராக இருந்த முகம்மது முர்சியைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இவர் முக்கிய பங்காற்றினார். அதன் பின்னர் இவர் முதலாவது பிரதிப் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2014 மார்ச் 26 இல் இவர் அரசுத்தேர்தலில் பங்கேற்கும் பொருட்டு தனது பதவிகளைத் துறந்தார்.[3] 2014 மே 26-28 இல் இடம்பெற்ற தேர்தல்களில் இவர் பெரும் வெற்றி பெற்று அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.[4]

அப்துல் பத்தா அல்-சிசி
Abdel Fattah el-Sisi
எகிப்தின் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
7 சூன் 2014[1]
பிரதமர் இப்ராகிம் மாலாப்
முன்னவர் அட்லி மன்சூர் (பதில்)
எகிப்தியப் பிரதிப் பிரதமர்
பதவியில்
16 சூலை 2013  26 மார்ச் 2014
பிரதமர் ஆசெம் அல் பெப்லாவி
இப்ராகிம் மாலாப்
முன்னவர் மொம்தாசு அல்-சாயீது
44வது பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
12 ஆகத்து 2012  26 மார்ச் 2014
முன்னவர் முகமது உசைன் தந்தாவி
பின்வந்தவர் செட்கி சோபி
எகிப்தியப் படைத்துறைத் தலைவர்
பதவியில்
12 ஆகத்து 2012  26 மார்ச் 2014
முன்னவர் முகமது உசைன் தந்தாவி
பின்வந்தவர் செத்கி சோபி
தனிநபர் தகவல்
பிறப்பு 19 நவம்பர் 1954 (1954-11-19)
கெய்ரோ, எகிப்து
அரசியல் கட்சி சுயேட்சை
வாழ்க்கை துணைவர்(கள்) எந்திசார் ஆமெர் (1977–இன்று)
பிள்ளைகள் முஸ்தபா, மகுமுது, அசன், ஆயா[2]
படித்த கல்வி நிறுவனங்கள் எகிப்திய இராணுவ அகாதெமி
சமயம் சுன்னி இசுலாம்
இணையம் அதிகாரபூர்வ இணையதளம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு  எகிப்து
கிளை எகிப்திய இராணுவம்
பணி ஆண்டுகள் 1977–2014
தர வரிசை படைத்துறை உயர்தரப்பணியாளர்
படையணி காலாட்படை
சமர்கள்/போர்கள் வளைகுடாப் போர்
சினாய் கிளர்ச்சி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.