அப்கொட்
அப்கொட் (மாற்றாக தமிழில் சாமிமலை, Upcot (Samymalay)) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். இது அம்கமுவா வட்டாரச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. நோர்வுட், மசுகெலியா நகரங்களிலிருந்து அப்கொட்டை அடைவதற்காண தெருக்கள் உள்ளன.இது, தேயிலை பெருந்தோட்டங்கள் கூடுதலாக அமைந்துள்ள பகுதியாகும். பெரும் அளவிலான மக்கள் தேயிலை சார் தொழில்களிலும், மரக்கறி பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது சமனல மலைத்தொடரின் வடக்குச் சரிவில் சமனல மலைத்தொடர் வனப்பாதுகாப்பு வலைஅயத்தின் எல்லையில் அமைந்துள்ளது. களனி ஆற்றின் முக்கிய கிளை ஆறுகளில் ஒன்றான மசுகெலி ஆறு சாமிமலையிலிருந்தே இருந்தே ஊற்றெடுத்துப் பாய்கிறது.
அப்கொட் | |
![]() ![]() அப்கொட்
| |
மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - நுவரெலியா |
அமைவிடம் | 6.7925°N 80.6139°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 4829(அடி) 1471 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 22094 - + - CP |
ஆதாரங்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.