அன்புள்ள ரஜினிகாந்த்
அன்புள்ள ரஜினிகாந்த் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. நடராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அம்பிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
அன்புள்ள ரஜினிகாந்த் | |
---|---|
இயக்கம் | கே. நடராஜ் |
தயாரிப்பு | எம். எஸ். அக்பர் தூயவன் தமிழ் மணி |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் அம்பிகா வை. ஜீ. மகேந்திரன் ராஜ்குமார் கே. பாக்யராஜ்(கெளரவ வேடம்) |
விநியோகம் | எஸ். டி. கம்பைன்ஸ் |
வெளியீடு | ஆகத்து 2, 1984 |
நீளம் | 3995 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
துணுக்குகள்
* தயாரிப்பு தூயவன். இவர் தேவர் பிலிம்ஸில் கதை வசனகர்த்தாவாக பணியாற்றியவர். ரங்கா, அன்புக்குநானஅடிமை போன்ற படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
- இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்தாகவே வருகிறார். முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் மீனா பின்னாளில் ரஜனிகாந்துடன் ஜோடியாக "முத்து" போன்ற படங்களில் நடித்தார்.
- இத்திரைப்படத்தை இயக்கியவர் இலங்கை மன்னாரைச் சேர்ந்த "சிலோன்" நடராஜன். இவரே "மூன்று முடிச்சு" படத்தில் மனச்சாட்சியாக நடித்தவர்.
- இத்திரைப்படத்தில்தான் லதா ரஜனிகாந்த் முதல்முதலாக பின்னணிப் பாடலைப் பாடினார். பாடல் - "கருணை உள்ளமே, ஓர் கடவுள் இல்லமே"
- இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி நடிகரும்கூட. இயக்குநர் பாலாவின் நான் கடவுள் படத்தில் சாமியாராக நடித்தார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.