அன்பளிப்பு
தாமாக உவந்து பிறருக்குத் தரும் பொருட்கள் அல்லது சேவைகள் அன்பளிப்பு ஆகும். அன்பளிப்பைப் பெறுவோர் இவ்வாறே பின்னர் அன்பளிப்பைத் திரும்பித் தருவார் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கக் கூடும். இருப்பினும் இது ஒரு வணிகப் பண்டமாற்று இல்லை. அன்பளிப்புகள் இலவசகமாகத் தரப்படுவையாகும்.
தமிழர்கள் மத்தியில் ஒரு வீட்டுக்குச் செல்லும் போது உணவுப் பொருட்கள் அல்லது இதர பொருட்களைக் கொண்டு செல்வது பண்பாகப் பார்க்கப்படுகிறது.
தமிழர் வாழ்வோட்ட சடங்குகளிலும் அன்பளிப்பு வழங்குவது வழக்கம்.
இந்த வழக்கம் சிலரால் மேசமாகத் தமது இலாபத்துக்காகப் பயன்படுத்துவதாகவும் விமர்சனம் உண்டு. எடுத்துக்காட்டாக அன்பளிப்புகளைப் பெறும் பொருட்டு சடங்குகளை நடத்துவோரும் உள்ளனர். இதனால் உண்மையாகச் சடங்குகள் அல்லது கொண்டாட்டங்களையும் நடத்துவோரும் சங்கடத்துக்குள்ளாவதுண்டு. இப்படியானால் மாற்று வழிகளில் அன்பளிப்புகளை வழங்குவது ஒரு தீர்வாக அமையலாம்.