அன்னதானம்

அன்ன தானம் (pronunciation ) (Soup kitchen) என்றால் உணவைப் பசியுற்றோருக்கு உவந்து வழங்குவதைக் குறிக்கும். மேலும் பசியுற்றோருக்கு உணவளிப்பது சிறந்த மனிதப் பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலைநாடுகளில் உணவு வங்கிகள் மூலமும் உறையுள்கள் மூலமும் உணவற்றோர்க்கு உணவு வழங்கப்படுகிறது.

சொற்பிறப்பியல்

அன்னம் என்றால் சோறு ஆகும்.[1] தானம் என்றால் கொடை என்று பொருள்படும். தானம் என்பது தா எனும் வினையின் தொழிற்பெயர் வடிவமாகும் என்பது தேவநேயப் பாவாணரின் கூற்று ஆகும்.

கோவில்களில் அன்னதான திட்டம்

2011 ஆம் ஆண்டு தமிழக அரசு கோவில்களில் அன்னதான திட்டம் என்பதை அறிமுகம் செய்தது. இதன் மூலம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வருகின்ற கோவில்களில் மதிய வேளையில் அன்னதானம் தர வழி வகுக்கப்பட்டது. [2] இதன் அடிப்படையில் குறைந்தது 25 நபர்களுக்கும் அதிகபட்சம் 100 நபர்களுக்குமாக அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.


மேற்கோள்கள்

  1. விக்சனரி, தானம்
  2. [தினமலர் ஜூலை 07,2013 இதழ் கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்துவதில் தடுமாற்றம்]

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.